பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைகடைக் கோவை னோரன்ன புலவர் மாநாடுகள் கேட்டுக்கொள்ள வேண் டும். சற்றுக் காலத் தாழ்விற் பயன்பெறுவதாக இருப்பினும் அதுபற்றி வெறுத்துப் பேசாமல் மீண்டும். மீண்டும் வேண்டிக் கோடல் நன்றாகும். அன்போடு பன்னாள் அழைத்தால் இறைவனும் வெளிப்பட்டு அரு ளாமலிருக்க முடியாது. ஆதலின், சைவாதீனத்துத் தலைவர்களையும் அன்பர்கள் பிறரையும் அன்புக் கயிற் றாற் பிணிக்க முயல்வதே அறிவுடைமை யாகும். 32 5.இறுவாய் இம்மாநாடு, புலவர் பெருமக்கள் வாழ்ந்த சோழ வளநாட்டில் தஞ்சை திருச்சிராப்பள்ளித் தலை நகர களுக்குரியதாக இத் துறையூரில் முதலில் தொடங்கப் பெறினும், திருவருட் பாங்கால் இது வரும் ஆண்டு முதல் தமிழ் வழங்கும் நிலங்கள் எல்லாவற்றுக்கும் பொதுவெனக் கொள்ளப்பட்டு, ஒவ்வோராண்டினும் ஒவ்வொரு தலை நகரினும் கூடித் தமிழ் மொழிக்கும தமிழ்ப் புலவர் முதலிய மக்களுக்கும் நலம் பயக்கும் வண்ணம் திருவருட் டுணைகொண்டு தமிழன்பர்கள் செய்தல் வேண்டும். செல்வரும் புலவருமாகிய தமிழ் மக்கள் தம்மில் வேறுபாடின்றி ஒற்றுமையுடன் ஒருங் கியைந்து தமிழன்னையைப் பேண முன்வரின், அவ் வனனை தன் மககளின் நலம் வளர வாழ்த்துவள். அன்னையர் வெறுப்புக்கு மக்கள் ஆளாதல் நலமன்று. தமிழன்னை தன் மக்களாகிய நம்மை உளங்குளிர்ந்து வாழ்த்துவளாயின் நம் வாழ்க்கை சிறந்த இன்பப் பேறுடையதாகும் என்பதை உறுதியாகக் கடைப்பிடிப் பீர்களாக.