பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் பண்டைய ரீதிதாலாசிரியர் கிறார். கடையாயார், இடையாயார், தலையாயார் ஆகிய இம் முத்திறத்தாரும் அஞ்சுதற்குரியன யாவை என்னும் வினாவை எழுப்பி விடை யிறுக்குமுகமாக முறையே கடையாயார் பசிக்கு அஞ்சுவரெனவும், இடையாயார் துன்பத்திற்கு அஞ்சுவரெனவும், தலையாயார் பழிச் சொல்லிற்கு அஞ்சுவரெனவும் கூறுவர். குலப்பெருமை பேசுவார்க்கு "நல்ல குலமென்றுந் தீய குலமென்றுஞ் சொல்லள வல்லாற் பொருளில்லை" என்றும். "தவங் கல்வி ஆள்வினை எறிவற்றான் ஆகும் குலம்" என்றுங் கூறுவர். இனோரன்ன சிறந்த நீதிமணிகள் பல ஒளி செய்தலை இந்நூலாகிய பொற்பேழையிற் பரக்கக் காணலாம். பிற்காலத்து ஒளவைப் பிராட்டியார் அருளிய ஆத்திசூடி,வாக்குண்டாம், நல்வழி முதலிய நீதி நூல் கள் சிறுவரும் உணர்ந்து இன்புறத்தக்க நிலையில் அமைந்து பேரறிவாளர்க்கும் விருந்தாக விளங்குவன. "இயல்வது கரவேல்' என்னும் சூத்திரம் ஒருவன் மன மொழி மெய்களாற் பிறர்க்குச் செய்யக்கூடிய உதவியை ஒளித்தலாகாது என்னும் பொருளை உட்கொண்டு இப் பொருளின் விரிவுகளுக் கெல்லாம் நிலைக்களமாக நிற்றலை நோக்குவார்க்கு இதன் திட்ப நுட்பங்கள் இனிது விளங்கும். "சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைச் செவ்வன் ஆடியிற் செறித்தினிது விளக்கித் திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம்' என்பதனாற் சூத்திரத்தின் இலக்கணத்தை அறியலாம். இவ் விலக்கணத்துக்குப் பெரிதும் இவ் ஆத்திசூடிச் சூத்திரங்கள் இயைபுடையவாக விளங்குவன. இந்