பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 உரைாடைக் கோவை "காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற ஏமமிகும் கற்புடையான் இன்பினும் இன்பாயது" என் று, சொல்லொணாமையைக் குறிப்பிட்டார். இதற்கு மேல் அவ் வநுபவச் சுவையை எடுத்துக் கூறுவதற்கு எங்ஙனம் இயலும்! திருவாசகத் திருப்பாடல்களை ஒளடவ ராகமாகிய மோகனத்திற் பொருளுணர்ந்து பாடுவாராயின்,கல் நெஞ்சமுங் கரையும். "திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்னும் மூதுரையும் இதுபற்றி யெழுந்ததே. கவிஞர் பெருமானாகிய சிவப்பிரகாச அடிகள், "வாதவூ ரன்பர் மலர்வாய்ப் பிறந்த திருவா சகமிங் கொருகா லோதில் கருங்கல் மனமுங் கரைந்துகக் கண்கள் தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய அன்ப ராகுந ரன்றி மன்பதை யுலகில் மற்றைய நிலரே" என்று தம் ஆராமையை வெளிப்படுத்தினர். இன்பக் கலைகளுள் ஒன்று இசையென்பர் அறிவுடையோர். அவ் விசைக்குக் கொழுகொம்பு போல ஆதாரமாக நிற்பது இசைப் பாடல்களாகும். சுவை கனிந்த பாடல்களி லன்றி இசையின் பெருமையை உணர்தல் இயலாது. இசை பாடுபவன் சுவைகளை அநுபவித்துத் தன் உட் கோளைப் புலப்படுத்துதற்குச் சிறந்த பாடல்களே பற் றுக் கோடாகும். வேதத் தெ ண்டு வீணை கேட்பாரி வெண்காடு மேவிய விகித னாரே