பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80% உரைநடைக் சோவை "பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப் பரப்பே" என்னும் திருப்பாட்டின் இம் முற்பகுதியில் இறைவனு டைய எங்குநிறை இயல்பைக் கூறிப், பிற்பகுதியில், சீருறு சிந்தை யெழுந்ததோர் தேனே! திருப்பெருந் துறையுறை சிவனே !' என்று தம் அகத்தும் சிவ தலத்தும் வெளிப்படும் உண்மையைப் புலப்படுத்தி யுள்ளார். இங்கே எங்கு நிறை நிலையில் ஒளிப்பரப்பாகவும், உள்ளத்தில் இனிக் குந் தேனாகவும், திருக்கோயிலில் மங்கலகரமான மூர்த்தியாகவும் பெருமான் பொருணயம் நினைந்து இன்புறத் தக்கது. விளங்குவர் என்னும் ஆண்டவன் அமைப்பாகிய அன்பு, அருள், அறிவு முதலிய அரிய குணங்களில் ஈடுபடுத லன்றி, மக்க ளமைப்புக்களாகிய சாதி, குலம், பிறப்பு, பொருள் முதலியவை பற்றிய உயர்வு தாழ்வுகளைச் சிறிதும் நம் மணிவாசகனார் கருதியவரல்லர். இவ்வுண்மையைப் புலப்படுத்துதற்கே, 'சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப் பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேன்' என்று தம் முற் பட்ட இயல்பையும், 'குலங் களைந்தாய் களைந்தாய் என்னைக் குற்றம்' என்று இறைவனுக்குத் தாம் ஆளாய பிற்பட்ட இயல்பையும் கூறுவாராயினர். மக்களுக்குக் குலப் பெருமை பேசுதல் இயல்பென்ப தும், அதனால் உண்டாஞ் செருக்கு ஒழியின், அது மூல மாக உண்டாகும் எல்லாக் குற்றங்களும் நீங்கிவிடும் என்பதும் அவர்கள் கண்ட உண்மைகளாம். உடல், பொருள், ஆவி மூன்றனையும் இறைவனுக்குரிய பொருள்களாகக் கொடுத்து, அவற்றில் ஒரு சிறிதும்