பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலத்து அங்கதம் ஆழ் பி ன மானுடைய ஆயுதங்களைப் புகழ்ந்து கூறுதல்போற் பழித்து அவன் வசையைக் குறிப்பிற் கூறிச் செருக் கொழியச் செய்த கவியரசியாரின் திறமை பாராட்டத் தக்கது. இன்னும், "உவர்க்கட லன்ன செல்வரு முளரே கிணற்றுற் றன்ன நீயுமா ருனையே' என்று ஒரு புலவர் ஒரு கொடை வள்ளலைப் புகழ்ந்து கூறுமுகமாக, கொடாத பெருஞ்செல்வரை இழித்துக் கூறினர். சிலர் பரந்த செல்வமுடைய ராயினும் அச்செல்வம் பிறர்க்குப் பயன்படாது என்பது 89 தோன்ற, 'உவர்க்கட லன்ன' என்று உவமை கூறப் பட்டது. இது விளக்கமாகப் பிறிதோரிடத்துத், "தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல் உண்ணா ராகுப நீர்வேட் டோரே" என்று கூறப்பட்டது. செல்வப் பரப்புடையேம் எனச் செருக்குறுவார்க்கு இது சுடு சொல்லாகும். ஏனாதி திருக்கிள்ளி என்பானை மதுரைக் குமரனார் என்னும் புலவர் பாடிய ஒரு பாடலில், அவனுடையா பகையரசரைப் பழித்துரைத்த செய்தி வியக்கத் தக்க முறையில் அமைந்துள்ளது. அப்பாடல் வருமாறு:- "நீயே, அமர்காணின் அமர்கடந்தவர் படை விலக்கி யெதிர்நிற்றலின் வா அள் வாய்ந்த வடுவாழ் யாக்கையோடு கேள்விக் கிளியை கட்கின் னாயே