பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவர் காண விரும்பிய நாடு

37



திலேயே இருந்துங்கூட, சந்தேகம், பயம், சஞ்சலம், நம்பிக்கைக் குறைவு, பழக்க வழக்கம் ஏற்படுத்தியதால் உண்டான பற்று பாசம் ஆகிய வெவ்வேறு எதிரிகள் கிளம்பக்கூடும்-இவைகளை எல்லாம் முறியடிக்கவேண்டும். உலகம், இதை நாம் செய்யமுடியுமா; நமக்கு அந்த ஆற்றல் இருக்கிறதா என்று பார்க்கக் காத்துக்கொண்டிருக்கிறது. நாம் அவருடைய காலத்தவர், அவருடைய கருத்துக்களை அறிந்தவர்கள், என்பதற்கு நாம் உதிர்த்த கண்ணீர் மட்டும் உலகுக்கு அத்தாட்சியாகிவிடாது. அவர் எத்தகைய இந்தியாவைக் காண விரும்பினாரோ, அதை உருவாக்கும் அரும்பணியை நாங்கள் ஏற்று நடத்துகிறோம் பாரீர் என்று கூறி, வெற்றிகரமாக நடத்துவது தான், தகுதியான அத்தாட்சியாகும். அவர் காண விரும்பிய இந்தியாவை, மீண்டும் கவனத்திற்குக் கொண்டுவருவோம்.

ஏழை ஈடேறி ஏழை உரிமை பெற்று விளங்கும் தாடு.
மக்களில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற நிலை இல்லாத நாடு.
எல்லோரும் தோழமையுடன் வாழும் நாடு.

இந்த நாடு--காந்தி நாடு--காண்பதுதான், நமது தலைமுறைக்கு உள்ள வேலை இதைச் சாதிக்க, அனைவரும் ஒன்றுபட, நமது தலைவர்களெல்லாம் கூடிப்பேசி, அனைவரின் ஆற்றலையும் ஒருமுகப்படுத்தி. இந்த அரும்பணியை வெற்றிகரமாக முடிக்கவேண்டும் நாடெங்கும், நகரெங்கும், இலட்சக்கணக்கிலே கூடினர் மக்கள் --அவர்கள் மறைந்த உத்தமருக்குத் தமது கண்ணீரை அர்ப்பணித்தனர் --அவர் காட்டிய வழிச்சென்று தீட்டிய சித்திரத்தைக் காண, இனிப் புதியதோர் ஆர்வத்துடன். அனைவரும் ஒன்றுபட்டுப் பணிபுரிய மக்களுக்கு நேர் வழி காட்டுவதும், ஒற்றுமைக்கான திட்டம் தீட்டுவதும், தலைவர்கள் கடமை.

அவர் வாழ்க்கையில் ஓர் சம்பவம்.

1893-வது ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் ஒரு வழக்குக்காகச் சென்றிருந்தார். தலைப்பாகையுடன்