பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவர் சிந்திய இரத்தம்

51



தமது சுகானுபவத்தை இழக்க மனம் வராது போகுமானால், மக்கள் இனித் தாங்கள் விழிப்புப்பெற்றுவிட்டதால், முற்றுந்துறந்தவர் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்ற இலக்கணத்தை உத்தமர் காந்தியாரின் வாழ்க்கையின் மூலம் தெரிந்து கொண்டுவிட்டதால் இனி மக்களை மயக்க, பழைய சக்திகள் கூறும் உறைகளை நம்பப்போவதில்லை. அந்த உறைகளின்படி அமைந்துள்ள முறைகளைக் கொள்ளப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தி, அன்பு நெறியை, அனைவரும் ஒரு குலம் என்ற அறநெறியைக் கைக்கொள்வோம், வேறு வழி வேண்டாம் என்று கூறி, புது வாழ்வு துவக்கவேண்டும். அந்தப் புது வாழ்வு பிறக்கவே, அவர் இரத்தம் சிந்தினார்.