பக்கம்:உலகு உய்ய.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மிதித்துச் செல்ல வேண்டும். சூழ்நிலையின் கடுமைக்குச் சோர்ந்து விடலாகாது; பொறாமையில் பிறர் கூறும் இகழ்ச் சியை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளலாகாது; காரி யத்திலேயே கண்ணாயிருக்கவேண்டும். இந்த அறி வுரையை, குமரகுருபரர்,

"மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயி னார்.”

என்னும் தமது நீதி நெறி விளக்கம் என்னும் நூற்பாட லில் அழகாக அளித்துள்ளார். தனக்கு இன்பம் வேண்டா னாய், முயன்று செயலாற்றுவதையே விரும்புபவன், தன் சுற்றத்தாரின் துயர் நீக்கித் தாங்கிக் காக்கும் தூண் போன்றவனாவான் எனவள்ளுவர் கூறியுள்ளார்:

'இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர் துன்பம் துடைத்துான்றும் தூண்' (615)

என்பது அவரது திருக்குறள் பாடலாகும். தன் கேளிர்’ என்பதற்குத் தன் மக்களினம் எனப் பொருள் கொள்ளின் பெருமையுடைத்தாகும்.

தோல்விக்குத் துவளற்க:

ஆக்கச் செயலாற்றுங்கால் எத்தனையோ இடையூறு கள் குறுக்கிடலாம்; தோல்வியே நேரிடலாம்; அதற்காகத் துவண்டு போகக் கூடாது. தோல்வியை வெற்றிக்கு வழி காட்டிய முன் அனுபவமாகக் கொள்ள வேண்டும். தடைக் கல்லைப் படிக்கல்லாகக் கொண்டு ஏறி மிதித்துச் செல்ல வேண்டும். தோல்வியைக் கண்டு துவளுபவன், சவக்குழியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/109&oldid=544765" இலிருந்து மீள்விக்கப்பட்டது