பக்கம்:உலகு உய்ய.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

யெடுத்துச் சென்று வென்று தன் நாட்டை மீட்டானாம். எனவே,ஆக்க வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்கள், விரைவில் கை கூடாமையைக் கண்டோ அல்லது தோல்வியைக் கண்டோதுவளாமல் அடுத்துமுயன்றால்ஆக்கம் பெறலாம்.

எண்ணித்துணிக:

'எண்ணித் துணிக கருமம்' என்பது வள்ளுவர் அறி வுரை. எந்தச் செயலையும் திடுதிப்பென்று தொடங்கி விடாமல், செய்யும் முறையை முன்கூட்டி எண்ணி ஆராய்ந்து திட்டமிட வேண்டும். பின்னர்த்திட்டம் இட்ட படி நடைமுறையில் அதைச் செயல் படுத்த வேண்டும். வெற்றி கிடைக்குமாயின் மேலும் அந்தப் பாதையில் தொடர்ந்து முன்னேறலாம். தோல்வி கிடைப்பின், தோல் விக்கு உரிய காரணங்களை ஆராய்ந்து, மீண்டும் அக் காரணங்கள் நிகழாதவாறு ஆராய்ந்து திட்டமிட்டு அதன் படி செயல்பட வேண்டும். மெளண்ட்பாட் டன் என்னும் ஆங்கிலக் கப்பற் படைத் தலைவர், இந்த நாளில் இத் தனை மணிக்கு நார்வே நாட்டுத் துறைமுகத்தில் தம் படை யைத் தரையிறக்க வேண்டும் எனத் திட்டமிட்டுக்கொண்டு சென்றாராம். குறித்த நேரத்தில் தரையிறக்க முடியாமற் போயினும் வெற்றி பெற்று விட்டாராம். பின்னர், குறித்த நேரத்தில் தரையிறக்க முடியாது போனமைக்கு உரிய காரணத்தைப் பற்றிப் படை மறவர்களுடன் ஆய்வு செய்து, இனி அவ்வாறு நிகழாதிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினாராம், படையைத் தரையிறக்கக் காலம் தாழ்த்த நேரம் எவ்வளவு எனில், ஒரே ஒரு நிமிடம் தானாம். அதாவது, எட்டரை மணிக்குமேல் ஒரு நிமிடம் கூடுதல் ஆய்விட்டதாம். எனவே, முன் கூட்டி எண்ணித் துணிந்து, அவ்வண்ணமே, காலம் தாழ்த்தாது செயல்புரிய வேண்டும் என்பது இதனால் பெறப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/111&oldid=544767" இலிருந்து மீள்விக்கப்பட்டது