பக்கம்:உலகு உய்ய.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

எளிமையும் சிக்கனமும்:

வட இந்தியாவில் அண்ணல் காந்தியடிகளும் தென் னிந்தியாவில் பெரியார் ஈ. வே. இராமசாமி அவர்களும் போன்றவர்கள் நடைமுறையில் வாழ்ந்து காட்டிக் கற்பித்த எளிமையையும் சிக்கனத்தையும் இளைஞர்கள் உணர்ந்து பின்பற்ற வேண்டும். இளைஞர்கட்கு வழிகாட்டி களாகப் பெரியவர்களும் நடந்துகொள்ள வேண்டும். உடையிலும் உணவிலும் ஒப்பனைப் பொருள்களிலும் செலவிடும் வீண் ஆரவார - ஆடம்பரங்களை அகற்ற வேண்டும். பெண்கள் நகைப் பைத்தியத்தினின்றும் விடுபட வேண்டும். இதனால் ஒரு நன்மையும் இல்லை. எல்லாம் அளவோடு இருந்தால் போதுமானது. ஒருவரைப் பார்த்து ஒருவர் வீண் ஆடம்பரங்களை வளர்த்தலாகாது. ‘காரியம் பெரிதே தவிர வீரியம் பெரிதில்லை’ என்பது பழமொழி. கடின ஆக்க வேலை உழைப்பு என்னும் ஒரு காலையும், எளிமையான சிக்கன வாழ்வு என்னும் மற்றொரு காலை யும் கொண்டு மக்கள் நடைபோட வேண்டும்.

ஆக்க வேலையில் கண்ணும் கருத்துமாயிராமல், ஆடம்பரத்தில் காலை வைத்துவிடின், கடன் வாங்கி ஏழையாக வேண்டி வரும். கடன் இல்லாதவனே பெரிய செல்வனாவான், ஈண்டு தெலுங்கு அறிஞராகிய வேமன்னர் அருளியுள்ள 'அப்பு லேனி வாடு யதிக சம்பன்னுடு’ (கடனில்லாதவன் பெரிய பணக்காரன்), அப்பு லேனி வாடு யதிக பலுடு’ (கடனில்லாதவன் பெரிய வல்லமை யுடையவன்) என்னும் வேமன்ன பத்திய நூலின் பாடல் பகுதிகள் கவனிக்கத் தக்கன.

செய்யும் வேலைக்குத் தகக் கிடைக்கும் வருவாய்க்கு ஏற்ற செலவே செய்ய வேண்டும். வருவாய்க்குமேல்

– 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/114&oldid=544770" இலிருந்து மீள்விக்கப்பட்டது