பக்கம்:உலகு உய்ய.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

‘Qgspairs) of LLGr’ G. Jujørðr ‘well - chosen book' என்னும் தொடரை ஊன்றி நோக்க வேண்டும். தேர்ந் தெடுக்கப்பெற்ற நல்ல நூல்களைக் கற்க வேண்டும் என்கிறார். கற்கத்தகுந்த நூல்களைப் பிழையின்றிக் கற்க வேண்டும் என்னும் பொருளில் கற்க கசடு அறக் கற் பவை” என வள்ளுவர் கூறியிருப்பதும் காண்க. மற்றும் 'கல்விக்கு அளவில்லை; கற்பவரின் வாழ்நாட்கள் சிலவே அவற்றுள்ளும் பிணிகொள் நாட்கள் பல; எனவே, நீர் கலந்த பாலிலுள்ள நீரைப் பிரித்துப் பாலை மட்டும் பரு கும் அன்னத்தைப் போல, பொருந்தாதனவற்றை விலக்கி, நல்ல அமைப்புடைய நூல்களையே கற்க வேண்டும் என் னும் கருத்துடைய

“கல்வி கரையில; கற்பவர் நாள்சில;

மெல்ல நினைக்கிற் பிணிபல . தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து’’ (135)

என்னும் நாலடியார்ப் பாடலும் ஈண்டு எண்ணத்தக்கது. இப்பாடலில் உள்ள ஆராய்ந்து’, ‘தெரிந்து' என்னும் சொற்களையும், ஹென்றி வுட்டன் பாடலில் உள்ள "well chosen என்னும் தொடரையும் ஒப்பிட்டுக் காண்க. எனவே, நல்ல நூலோடும் நல்லவர்களோடும் பொழுதைப் போக்க வேண்டும்.

பொழுது போக்கு என்னும் பெயரில் நாள் முழுவதை யும் விணே போக்கிக்கொண்டிருத்தலாகாது - நாள் முழு தும் விளையாடிக் கொண்டிருத்தலாகாது. வேலை செய்ய வேண்டிய நேரத்தில் வேலை செய் - விளையாட வேண்டிய நேரத்தில் விளையாடு என்னும் கருத்துடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/128&oldid=544784" இலிருந்து மீள்விக்கப்பட்டது