பக்கம்:உலகு உய்ய.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

போர் ஊக்கமே வித்தாக உள்ளது. இன்னும், நாம் வாழும் பூவுலகிற்கும் வேறு உலகிற்கும் இடையே போர் நிகழ வில்லை; அதுவும் ஒரு காலத்தில் நிகழுமே என்னவோ! மேல் உலகத் தேவர்கட்கும் கீழ் உலக அரக்கர்கட்கும் எத்தனை - எத்தனையோ போர்கள் நிகழ்ந்த தாகப் புராணக் கதைகளில் படிக்கிறோம். “படே படே கடவுளர் கூட அரக்கர்களுடன் போரிட்டதாகப் புராணங்கள் கூறு கின்றன.

கடவுளர்கள் செய்ததாகக் கூறப்படும் கற்பனைப் போர்களை விட்டுவிடுவோம். மக்களுக்குள் நிகழ்ந்த நிக ழும் போர்களுக்குத் காரணம், தம் நலமும் தம்குழு நல முமேயாகும். இதனால், போர் ஊக்கத்தை. தற்காப்பு ஊக்கங்களுள் ஒன்றென உளவியல் அறிஞர்கள் உரைக்கின் றனா.

அரசர்கள்:

பழங்காலத்தில், நாகரிகம் இன்றிக் காட்டு மிறாண்டி களாய் வாழ்ந்த மக்கள், தம் நலம் கருதி, ஒரு வர்க்கு ஒருவரோ, ஒரு குழுவினரோடு மற்றொரு குழுவினரோ அடிக்கடிப் போரிட்டுக் கொண்டனர். நாளடைவில், ஒரு குழுவிற்கு ஒரு தலைவர் - ஓர் ஊருக்கு ஒரு தலைவர்- என்ற மாதிரி அமைப்பு ஏற் பட்டது. இந்தத் தலைவர்கள் குழுச் சண்டையையும் ஊர்ச் சண்டையையும் அடக்கி ஒழுங்கு செய்து வந்தனர். காலம் கடக்கக் கடக்கத் தலைவர்கள் அரசர்கள் ஆயினர்; அரச அமைப்புகள் தோன்றின. ஊருக்கு ஒர் அரசர் உண் டாயினர்; ஊர்களின் எல்லைகள் வரையறுக்கப் பட்டன. வரையறுக்கப்பட்டபோதே போருக்கும் வித்து இடப்பட்டு விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/147&oldid=544803" இலிருந்து மீள்விக்கப்பட்டது