பக்கம்:உலகு உய்ய.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

என்னும் சீவக சிந்தாமணிப் பாடலாலும் இன்ன பிற இலக்கியங்களாலும் அறியலாம். மற்றும், ஈண்டு, தொல் காப்பியப் புறத்திணை யியலிலுள்ள முழு முதல் அரணம்’ எனத் தொடங்கும் நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரையில் உள்ள,

"சிறப்புடை அரசியலாவன:-மடிந்த உள்ளத்தோனை யும், மகப் பெறாதோனையும், மயிர் குலைந்தோனையும், அடிபிறக்கிட்டோனையும் (புறமுதுகு காட்டி ஓடுபவனை யும்), பெண் பெயரோனையும் படையிழந்தோனையும், ஒத்த படையெடா தோனையும் பிறவும் இத்தன்மையுடை யோரையும் கொல்லாது விடுதலும், கூறிப் பொருதலும் முதலியனவாம்’- என்னும் பகுதி கூர்ந்து நோக்கத் தக்கது. புறமுதுகிட்டு ஓடுபவன்மேல் அம்பு எய்வது, புற முதுகிட்டு ஒடுவதைக் காட்டிலும் மிகவும் கோழைத் தனமான இழிந்த செயலாகக் கருதப்பட்டது. மற்றும். கழாத் தலையார் என்னும் புலவர் பாடியுள்ள "அறத்தின் மண்டிய விறல் போர் வேந்தர்” (62)என்னும் புறநானூற்றுப் பாடல் தொடரும் ஈண்டு ஒப்பு நோக்கற் பாற்று. அறப்போர் முறையில் முன்னறிவிப்புச் செய்தா லும், நமது மொழியறியாத ஆனினம் வெளியேருதாகலின், மாற்றரசரின் கொட்டிலில் உள்ள ஆனிரையை ஒட்டி : கொண்டு வந்து விடுதல் மரபு. இதனைத் தொல்காப்பி யர்' 'ஆதந்து ஒப்பல்” என்னும் பெயரால் குறிப்பிட்டுள் ளார். இந்த மாடு பிடி சண்டைக்குத் தமிழ் இலக்கண நூல்களில் வெட்சித் திணை' என்னும் பெயர் கொடுக்கப் பட்டுள்ளது.

  • தொல் - பொருள் - புறத்திணையியல் - 2
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/153&oldid=544809" இலிருந்து மீள்விக்கப்பட்டது