பக்கம்:உலகு உய்ய.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

எவையேனும் இரண்டு நாடுகளுக்குள் போர் ஏற்படினும், அது, உலகின் மற்ற பகுதிகளுக்கும் தொல்லை யுண்டாக் குவது நேரிடை அனுபவச் செய்தியாகும் அல்லவா?

போர்களின் பட்டியல்:

போர்களின் பட்டியல் ஒன்றை இங்கே தரின், மக்க ளினத்தின் மதி கெட்ட செயல் புரிய வரலாம். வரலாற் றுக் காலத்துக்கு முற்பட்ட காலமும் - வரலாற்றுத் தொடக்கக் காலமும்- வரலாற்றுத் தொடக்கக் காலத்தை யடுத்த பிற்பட்ட காலமும் ஆகிய பழங் காலத்திலும் மிகப் பழங் காலத்திலும் நிகழ்ந்த போர்களை விட்டுவிடு வோம். ஓரளவு மக்களினம் நாகரிகம் பெற்று முன்னேற் றம் அடைந்துள்ள காலமாகிய இற்றைக்குச் (1986) சற் றேறற் குறைய ஐந்நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகட்கு உட்பட்ட கால அளவில் நடைபெற்ற பெரும்பாலான போர்களைப் பட்டியல் படுத்திப் பார்ப்போம்:

அமெரிக்க உரிமைப் போர், ஆசியாகோப்போர், ஆப் கானியப் போர், இந்தியாவில் முசுலீம் மன்னர்களின் போர்கள், இந்தியாவில் ஐரோப்பியர்களின் போர், இத்தாலி - அபிசீனியப் போர், முதல் உலகப் பெரும் போர், இரண்டாவது உலகப்பெரும் போர், ஏக்கர் போர், ஏழு ஆண்டுப் போர், ஏழு வாரப் போர், கர்நாடகர் போர், கலிங்கப் போர், கார்லிஸ்ட்டுப் போர்கள், கிரை மியப் போர், குவிபெக் போர், கூர்க்கர் போர், சாலமிஸ், போர், சிலுவைப்போர், சீக்கியப் போர், சீன உள்நாட்டுப் போர், சீன-ஜப்பானியப் போர், தலைக் கோட்டைப்போர் தீப கற்பப் போர், நேஸ்பிபோர், நைல் போர், பக்சார் போர், பங்க்கர் குன்றுப் போர், பர்மியப் போர், பால்க் கன் போர்கள், பியூனியப் போர், பிரிட்டிஷ் உள்நாட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/157&oldid=544813" இலிருந்து மீள்விக்கப்பட்டது