பக்கம்:உலகு உய்ய.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இது, அந்தச் சேரமன்னன் மீது முரஞ்சியூர் முடிநாக ராயர்’ என்னும் புலவர் பாடிய புறநானூற்று நூலின் (2-ஆம்) பாடல் பகுதியாகும்.

'ஓர் ஐவர் ஈர்ஐம் பதின்மருடன் உடன்றெழுந்த போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக் கார்செய் குழலாட ஆடாமோ ஊசல்” (சிலம்பு-வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-24)

என்பது இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகார நூற் பாடலாகும். இந்தப் பாடலில் உள்ள போற்றாது’ என் னும் சொல்லை ஊன்றி நோக்க வேண்டும். கணக்குப் பார்க்காமல், எல்லாருக்கும் ஏராளமாக-தாராளமாகச் சோறு அளித்தான் என்ற செய்தியை இந்தப் போற்றாது' என்னும் சொல் அறிவிக்கிறது.

போர்க் களங் கண்டு இரங்கியுருகி ஆவன செய்ததும் போர்க்களத்தில் உணவளித்து உதவி செய்ததும் ஆகிய பழைய வரலாற்றுச் செய்திகளிலிருந்து, கி.பி. ப்த்தொன்ப தாம் நூற்றாண்டில் தொடங்கப் பெற்ற புதிய செய்தி யொன்றுக்கு வருவோம். அதுதான், செஞ்சிலுவைச் சங்க வரலாறாகும்.

செஞ்சிலுவைச் சங்கம்:

இத்தாலியில் சால்பெரினோ (Solferino) என்னும் ஊருக்கு அண்மையில், மூன்றாம் நெப்போலிய மன்னனுக் கும், பிரான்சிஸ் ஜோசப் என்னும் ஆஸ்திரியா மன்னனுக் கும் 1859-ஜூன்-24 ஆம் நாள் கொடும் போர் நடந்தது. ஆயிரக் கணக்கில் இறந்தவர் போக, புண்பட்டு உயிரோடு போராடிக் கொண்டு தண்ணிர்-தண்ணிர்’ எனக் கதறித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/163&oldid=544819" இலிருந்து மீள்விக்கப்பட்டது