பக்கம்:உலகு உய்ய.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

சில ஆண்டுகட்கு முன்பு தென் வியட்நாமுக்கும் வட வியட்நாமுக்கும் போர் நடந்து கொண்டிருக்கையில், இடையே வந்த புத்தாண்டுக்காக மூன்று நாள் போருக்கு விடுமுறை விட்டிருப்பதாகச் செய்தித் தாளில் படித்ததும் வியப்பும் ஏளனச் சிரிப்பும் ஏற்பட்டன. மூன்று நாளைக் குப் போர் இல்லாமல் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும் என்று எண்ணும் மக்களினம், மற்ற நாள்களிலும் போரின்றி அமைதியாய்-மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்று எண் ணாதது, வியப்புடன் வேதனையும் அளிக்கிறது. ஆடு மாடு கள் இவற்றையுணரும் பகுத்தறிவு பெற்றிருப்பின், மணி மடையர்களை எள்ளி நகையாடும். .

இயற்கைப் பகைகள்:

மாந்தர் தமக்குள் பகைத்துக் கொள்வது பைத்திய மாகும். மாந்தர்க்குப் பொதுப் பகைகள் எவ்வளவோ உள்ளன. பிணி, வறுமை, பற்றாக் குறைகள், மூப்பு, சாவு, மூட நம்பிக்கைகள், நோய்தரும் உயிர் அணுக்கள், புயல், இடி-மின்னல், பேய் மழை, வெள்ளம், வறட்சி, நில நடுக் கம், எரிமலை, தீ முதலிய எண்ணிறந்த இயற்கைப் பகை களை மக்களினம் எதிர்க்க வேண்டியுள்ளது. இவைகளே யன்றி, சீயம், புலி, கரடி, பாம்பு, முதலை, திமிங்கலம் முதலிய கொடிய உயிரிகளிடமிருந்தும் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இன்னும் எதிர் காலத்தில் வேறுலகத்தாரோடு மோத நேரிடினும் நேரலாம். தமக்குப் பொதுப் பகைகள் பல இருக்க், அவற்றினிடமிருந்து தம் இனத்தைக் காக்க வேண்டிய முயற்சியில் மட்டுமே ஈடுபட வேண்டிய இன்றியமையாமை இருக்க, மக்கள் தமக்குள் பொருது மடிவது மடமையினும் பெரிய மடமையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/167&oldid=544823" இலிருந்து மீள்விக்கப்பட்டது