பக்கம்:உலகு உய்ய.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

முனை முகத்து நில்லேல்:

பல நூற்றாண்டுகட்கு முன்பே, ஒளவையார் என்னும் தமிழ்ப் பெண் புலவர், தமது ஆத்தி சூடி என்னும் நூலில் ‘முனை முகத்து நில்லேல்’ (92) எனப் பாடி வைத்துள்ளார். ‘போர் முனைக்குப் போகாதே’ என்பது இதன் பொதுக் கருத்தாகும். சிலர் இதற்கு வேறு மாதிரியான கருத்து கூறுகின்றனர். போர் நடக்கும் இடத்திற்குப் போகாமல் உனது உயிரைக் காப்பாற்றிக்கொள்’ என்னும் கருத்தில் இதனை ஒளவையார் பாடியிருப்பதாகப் பொருள் கொண்டு, கோழைத்தனத்துக்கு ஒளவையார் வித்திட்டி ருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். அண்மைக் காலத்துக்கு முன் வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியார் என்னும் புரட்சிக் கவிஞர் ஒளவையாரின் கருத்தை நன்கு புரிந்து கொள்ளா மல், ஒளவையாருக்கு ஏட்டிக்குப் போட்டியாக, தாம் பாடிய புதிய ஆத்தி சூடி” என்னும் நூலில், முனை யிலே முகத்து நில்” (79) என்று பாடியுள்ளார். போர் முனை சென்று போரிடு’ என்பது இதன் பொதுக் கருத்து. இது புரட்சி வெறியில் பாடப்பட்டதாகும்.

நாட்டில் நடந்த பல்வேறு போர்க் கொடுமைகளைக் கண்டு வருந்திய ஒளவையார், உலகில் இனிப் போரே கூடாது எனப் பட்டறிவின் வாயிலாகத் தமது அறிவுை யினை உலகுக்கு அளித்தார். மற்றும், ஒளவையார் அதே "ஆத்தி சூடி என்னும் நூலில் இன்னோரிடத்தில், உலகில் போரே கூடாது என்னும் பொருளில் போர்த் தொழில் புரியேல் (87) என்று வெளிப்படையாகக் கூறியிருப்பது ஈண்டு கவனிக்கத்தக்கது. இதற்கும் ஏட்டிக்குப் போட்டி யாகப் பாரதியார் தமது புதிய ஆத்திசூடியில் 'போர்த் தொழில் பழகு’’ (74) என்று பாடியுள்ளார். ஆனால் பாரதியாரின் பாடலுக்கும் ஒரு வகையான வழு அமைதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/169&oldid=544825" இலிருந்து மீள்விக்கப்பட்டது