பக்கம்:உலகு உய்ய.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

முடியாது. வானவூர்தியில் பறந்து வருவோரை எந்தக் காட்டரணும் மதிலரணும் தடுக்க முடியாது. இக்காலப் படைக் கருவிகளைப் பற்றி விவரிக்க வேண்டியதில்லை. சில வல்லரசுகள், அணுக்குண்டு, நீரகக் குண்டு முதலிய வற்றை விறகு அடுக்குவது போல் அடுக்கி வைத்துக் கொண்டுள்ளன. ராக்கெட் படைக் கருவிகள், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் படைக் கருவிகள், முதலியன இன்று உள. இக்காலத்தில் ஓரிடத்திலிருந்து இன்னோரி டத்துக்குப் படையெடுத்துச் செல்ல வேண்டும் என்பது தேவையில்லை. ஓரிடத்தில் இருந்தபடியே, பல்லாயிரம் கல் தொலைவுக்கு அப்பாலுள்ள மற்றோரிடத்தைத் தாக்க முடியும். அந்த அளவுக்கு மடத்தன மனித மூளை அழிவுக் கருவிகளைப் புதிது-புதிதாய்ப் படைத்துள்ளது.

உலகில் அமைதியாகவும், எளிமையாகவும் இன்பமா கவும் மக்கள் வாழ்வு நடைபெற வேண்டுமெனில், இனிப் படைக்கலங்களைப் படைக்கலாகாது;இருப்பனவற்றையும், ஆழமாகப் பள்ளம் தோண்டித் தரைக்குள்ளே புதைத்து விடவேண்டும். உள் நாட்டுக் கலகங்களை அடக்குவதற்குப் போதுமான படை மறவர்களும் கருவிகளும் இருந்தால் போதும். நாடுகளுக்குள் இனியும் போர் கூடாது.

போர் தடுப்பு வழிமுறைகள்:

நாடுகள் சமமான ஆற்றல் உடையனவாயிருப்பின் போர் வராது. எல்லா நாடுகட்கும் இது இயலாத முறை யாகும். சிறிய இலங்கையும் (ரீலங்காவும்) பெரிய இந்தி யாவும் சமமாக இருக்க முடியுமா? ஒன்றிய அமெரிக்க நாடும் (U.S.A.) ரழ்சியாவும் ஒத்த ஆற்றல் உடையவை; எனவே, இவற்றிற் கிடையே போர் மூளுவது அரிது. ஆனால், இவற்றினும் சிறிய நாடுகளின் நிலை என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/172&oldid=544828" இலிருந்து மீள்விக்கப்பட்டது