பக்கம்:உலகு உய்ய.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

மக்கள் சமூகம் இருக்கட்டும்-இவற்றிற்கு அஞ்சா விடினும்மனச்சான்று என ஒன்று உள்ளதே-அதற்காயினும் அஞ்ச வேண்டும் அல்லவா? அதற்கு அஞ்சியும் தீயனவற்றை நீக்கியதாகத் தெரியவில்லை. மன மறிய வஞ்சனை செய்யாதே-வஞ்சித்தால் உன் மனமே உன்னைச் சுடும் என்னும் கருத்தில், திருவள்ளுவர், திருக்குறளில்

'தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்னெஞ்சே தன்னைச் சுடும்” (293)

என்று பாடியிருப்பதைப் பெரும் பாலார் பொருட் படுத்தியதாகத் தெரியவில்லை. மனச்சான்றை விற்றுமன மறியத் தீயன செய்து கொண்டேதான் இருக்கிறார் கள். இவர்களின் மனம் இவர்களைச் சுட்டதாகத் தெரிய வில்லை.

கடவுள், சமூகம், மனச்சான்று ஆகியவற்றுக்கும் அஞ் சித் திருந்தாத மக்களைத் திருந்த வைப்பதற்கு உரிய ஒரே வழி, அரசின் கண்டிப்பான-கட்டாயமான - ஆணை யின் (சட்டத்தின்) வாயிலாகத் திருத்துவது தான்! தீய வர்களை அரசு ஆணையின் மூலம் ஒறுப்பதே ஒரே வழி. 'மயிலே-மயிலே இறகு போடு என்றால் போடவே போடாது; அடியாத மாடு படியாது; அடி உதவுவது போல அண்ணன் தம்பியும் உதவமாட்டார்கள்’ என்னும் பழமொழிகள் ஈண்டு நினைவு கூரத்தக்கன.

கொலைத் தண்டனை:

கொடிய குற்றங்கள் செய்பவர்கட்கு எளிய சிறைத் தண்டனை கொடுப்பது போதாது. இதனால், சில நாட் களோ- சில திங்கள்களோ-சில ஆண்டுகளோ சிறையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/185&oldid=544841" இலிருந்து மீள்விக்கப்பட்டது