பக்கம்:உலகு உய்ய.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

கொலைத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதற்குத் தக்க சான்று பகரும். இந்த முறையை இனி ஒரு நூற்றாண்டு காலமாயினும் உலக நாடுகள் பின்பற்றினால், உலகில் திருட்டு-புரட்டு முதலிய தீய குற்றங்கள் அறவே அழிந் தொழியும்.

மரபு நிலையும் சூழ்நிலையும்:

குடும்ப மரபு வழியாக - பெற்றோர் வழியாக -தாம் பிறந்த பிறப்பு வழியாக ஒருவர்க்கு அமைந்திருக்கும் உடற் கூறும் உயிர்க்கூறும் மரபு நிலை’ (Heredity) எனப் படும். பழகும் நண்பர் போன்றோரின் சுற்றுப் புறப்பண்பு ஒருவர்க்கு அமைவது சூழ்நிலை (Environment) எனப் படும். ஒருவரையே சிலநேரம் மரபு நிலை வெல்லும் -சில நேரம் சூழ்நிலை வெல்லும். தாம் பிறந்த மரபு உயர்ந் ததா யிருப்பினும், சிலர் கெட்ட சூழ்நிலையால் கெட்டு விடுவதுண்டு - சிலர் கெடாமல் மரபு நிலைக்கு ஏற்ப நன் னிலையிலேயே இருப்பதுண்டு. தாம் பிறந்த மரபு தாழ்ந் ததாயிருப்பினும், சிலர் நல்ல சூழ்நிலையால் திருந்துவ துண்டு; சிலர் திருந்தாமல் மரபு நிலைக்கு ஏற்பத் தாழ்ந்த நிலையிலேயே இருப்பதும் உண்டு.

இது பற்றித் திட்ட வட்டமாக ஒன்றும் கூறமுடியாதது போல் தோன்றினும் - ஆளுக்கு ஆள் இது மாறுபடினும், மரபு நிலையைத் தீர்மானிப்பது சூழ்நிலையே என்னும் மறுக்க முடியாத உண்மைக்கு இறுதியில் வந்தேதீர வேண் டும். மக்களினம் தோன்றிய தொடக்கக் காலத்தில் (prehistorical period) மரபுநிலை, சூழ்நிலை என இரு வேறு பிரிவு இருந்திருக்க முடியாது. அப்போது மக்கள் சூழ் நிலைக்கு ஏற்ப இயங்கிக் கொண்டிருந்திருப்பர். நாளடை வில் சமூகம் உருவாக அரசும் உருவாயிற்று. இந்நிலையில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/188&oldid=544844" இலிருந்து மீள்விக்கப்பட்டது