பக்கம்:உலகு உய்ய.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

முறை உள்ள உலகம் உருவாகும். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ் வொரு மொழியிலும் சான்றோர்கள் அருளியுள்ள அற நூல் கள் மலிந்துள்ளன. மக்களினம் அந்நூல்களைக் கற்று அதன் படி ஒழுக வேண்டும். கள்வன் பெரியவனா? காப்பான் பெரியவனா? என்பது பழமொழி வினா. காப்பவனைவிட கள்வனே பெரியவன்-என்பது இதன் விடை. அரசு எவ்வ ளவுதான் கண்காணித்தாலும், ஒரு சிலராயினும் அரசை ஏய்த்துவிட முடியும். எனவே, அரசின் தண்டனைகட்கு இடம் இல்லாதவாறு, மக்களும் நல்ல நூல்களைக் கற்றும் அதன்படி நன்னெறியில் ஒழுகியும் அரசுக்கு உதவி ஒத்து ழைக்க வேண்டும். -

'கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக'. (391)

என்னும் திருக்குறள், மக்களினத்துக்கு வழங்கப் பெற்றுள்ள அரிய பெரிய அறிவுரையாகும்.

2. அகப் பொருள் துறை:

தமிழ் நூல்களில் அகப் பொருள், புறப் பொருள் என இருவகையான பொருள்கள் (செய்திகள்) கூறப்பட்டுள்ளன. ஒர் ஆணும் ஒருபெண்ணும் அகம் (மனம்) ஒத்துக் கூடி அக உணர்வால் உணர்ந்து பெறும் இன்பத்தைப் பற்றியது அகப் பொருளாகும். பால் (Sex) உணர்வும் காதல் வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் அகப் பொருளில் அடங்கும். அகப் பொருள் அல்லாத மற்ற வெளித் துறை கள் யாவும் புறப் பொருள் எனப்படும். மேலே பேசப் பட்டுள்ள தொழில், வாணிகம், கல்வி, அரசியல் முதலிய யாவும் புறப்பொருள் துறையாம். இனி அவற்றினும் வேறான அகப் பொருள் துறை குறித்துச் சிறிது ஆய்வாம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/197&oldid=544853" இலிருந்து மீள்விக்கப்பட்டது