பக்கம்:உலகு உய்ய.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

கணவர்? என்று கேட்டார்களாம். இந்த வினா நமக்கு வியப்பு அளிக்கலாம்; ஆனால் அவர்கட்கு இஃது இயற்கை போலும்! இந்தத் தொற்று நோய் இப்போது இந்தியாவி லும் பரவத் தொடங்கியுள்ளது. காதல் மணத்தை இங்கே யான் குறை கூறவில்லை. இந்தியாவில் - தமிழ் நாட்டில் பண்டைக் காலத்தில் காதல் மணம் மிகுதியாகப் பேசப் பட்டுள்ளது. ஆனால் அந்தப் பழைய காதல் முறை இப் போது தமிழ் நாட்டில் நடை முறையில் அவ்வளவாக இல்லை. பெற்றோர் பார்த்துச் செய்து வைக்கும் திரு மணமே மிகுதியாய் நடைபெற்று வருகிறது.

ஆயினும், இன்று, தமிழ் நாட்டிலும் சிறிது சிறிதாகக் காதல் மணம் வளரத் தொடங்கியுள்ளது. மணவிலக்கும் மறு மணமும் கூட தலைகாட்டத் தொடங்கியுள்ளது. ஆனால் இம்முறையைப் பின்பற்றும் பெரும்பாலான குடும்பங்கள் தமிழ் நாட்டில் உருப்பட்டதாக - உருப்படுவதாகத் தெரிய வில்லை. இப்பொழுதும் தமிழ் நாட்டில், இறுதிவரையும் ஒருவனுக்கு ஒரு மனைவி - ஒருத்திக்கு ஒரு கணவன் . என்ற முறையே நூற்றுக்குத் தொண்ணுாற்றொன்பது பங்கு பின்பற்றப்படுகிறது. ஆனால், இந்தியாவில் - தமிழ் நாட்டில், மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது; கணவன் இறந்தால் மனைவி மறுமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு இல்லை. இது கொடுமைதான்! இல்லையென்று சொல்லவில்லை. மறு மணம் செய்துகொள்ள விரும்பாத பெண்கள் போக, விரும் பும் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள வாய்ப்பளிப் பதே அறநெறியாகும். இந்தச் சீர்திருத்தமும் இப்போது தொடங்கப்பெற் றுள்ளது.

தென்னிந்தியாவில் காணப்படும் 'ஒருவர்க்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/201&oldid=544857" இலிருந்து மீள்விக்கப்பட்டது