பக்கம்:உலகு உய்ய.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

போலி அன்பு:

கற்புநெறி பிறழ்ந்து தம் கணவர்க்குத் தெரியாமல் வேறு ஆடவருடன் கள்ளத்தனமாக உடலுறவு கொள்ளும் 'விலங்குகள் ஒருபுறம் கிடக்கட்டும். ஒருத்திக்கு ஒரு வனே என்ற கொள்கையுடைய இந்தியா போன்ற நாடுக வில், கற்பு நெறி பிறழாது - வேறு ஆடவரை விரும்பாது இறுதிவரை தம் கணவருடனேயே நிலைத்திருந்து வாழும் 'பத்தினிப் பெண்டிர் நூற்றுக்குத் தொண்ணுற்றொன்பது பேர் உளர் என்று கூறலாம். கற்புடைய மகளிர் தொடர் பாகவும் ஒரு குறைக்கு இடம் உண்டு.

கற்புடைய மகளிர் வாழும் பல குடும்பங்களில்கூட கணவன் மனைவியரிடையே உண்மையான அன்பு இருப்ப தாகத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து - யான் அனு பவத்தில் பார்த்து அறிந்துள்ள குடும்பங்கள் சிலவற்றில் கணவன் மனைவியரிடையே போலி அன்பே காணப்படு கிறது. கணவன், தன் குடும்பத்தாரைவிட, மனைவியையும் மனைவியின் தாய் வீட்டாரையுமே மிகவும் விரும்புகிறான். மனைவி, தன் கணவனையும் கணவன் குடும்பத்தாரையும் விட, தன் தாய் வீட்டாரையே மிகவும் விரும்புகிறாள். மனைவி, கணவன் சொல்லைவிட, தன் பெற்றோர் சொல் லையும் உடன் பிறந்தார் சொல்லையுமே மிகவும் மதிக்கி றாள்.ஆனால், கணவன், மனைவி சொல்லையே மிகுதி யாக மதிக்கிறான்.மனைவியின் சொல்லுக்குத் தலையணை மந்திரம்' என்னும் சிறப்புப் பட்டம் சூட்டப்பட்டுள்ளது. பெண்பாலாராகிய ஒளவையாரே, தம் ஆத்திசூடி நூலில், தையல் சொல் கேளேல்" (63) என்று பாடி வைத்திருப்பது ஈண்டு எண்ணத் தக்கது.

தம் கணவரைத் தவிர வேறு ஆடவரை விரும்பாத கற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/215&oldid=544871" இலிருந்து மீள்விக்கப்பட்டது