பக்கம்:உலகு உய்ய.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219

என்பது பரஞ்சோதியாரின் திருவிளையாடல் புராணப் பாடல் பகுதி யாகும். கடவுளும் தமிழ் மொழியை ஆய்ந்து சுவைத்ததாக இப்பாடல்கள் அறிவிக்கின்றன. மற்றும், கிரேக்கர், ஸ்காண்டிநேவியர், எகிப்தியர், சீனர் முதலி யோரிடையேயும், மொழியைக் கடவுள் படைத்தார் என்ற நம்பிக்கை உண்டு. சமசுகிருத மொழியிலுள்ள இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என்னும் நான்கு வேதங்களையும் கடவுள் படைத்தார் என்று சொல்லுவர். இவையெல் லாம், மொழிக்கும் நூல்கட்கும் பெருமை தேடக் கூறப் படுவன வாகும். சமசுகிருதத்தைத் தேவ மொழி என்று கூறுவதும் இத்தயைதே.

கடவுள் மொழிகளைப் படைத்தா ரெனில், உலகுக்கு ஒரே மொழியை யல்லவா படைத்திருக்க வேண்டும்? பல மொழிகளைப் படைத்தது ஏன்? தொடக்கத்தில் இருந்த மூல மொழிகள் சில அழிந்திருக்கின்றனவே! கிரேக்கம், இலத்தீன், சமசுகிருதம் முதலிய மொழிகள் ஏட்டள வோடு நின்று பேச்சு வழக்கு அற்று விட்டனவே! பிற் காலத்தில் பல்வேறு மொழிகள் புதிதாகக் கிளைத்துத் தோன்றியுள்ளனவே! கடவுள் படைத்தார் எனில், இந்த நிலைமைகள் ஏற்பட்டது ஏன்? முதலில் சில மொழிகளைப் படைப்பதும், பிறகு அவற்றை அழித்து விடுவதும், பின் னர் வேறு சில மொழிகளைப் படைப்பதும் கடவுட் செய லுக்கு ஏற்குமா? இந்தப் பொருந்தாச் செயலைப்பொருந்த வைப்பதற்காகச் சிலர் சப்பைக் கட்டு கட்டி வேறொரு கதை அளக்கின்றனர்: அதாவது:- முதலில் கடவுள் ஒரே மொழியைத்தான் படைத்தார்; இதனால் ஒரே மொழி பேசிய மக்கள் அனைவரும் ஒற்றுமையா யிருந்ததனால் எல்லாச் செயல்களையும் தாமே எளிதில் முடித்துக் கொண்டனர்; இதனால் திமிர் கொண்டு கட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/220&oldid=544876" இலிருந்து மீள்விக்கப்பட்டது