பக்கம்:உலகு உய்ய.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227

எனல் மரபு. அமெரிக்கக் கண்டத்தில், பிரெஞ்சு, ஸ்பானி யம், போர்ச்சுகீசியம் ஆகிய மொழிகள் வழங்கப்படும் ஆர் ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, குவாட்டமாலா முதலிய இருபது நாடுகள் இலத்தீன் அமெரிக்கா என வழங்கப்படுவது ஈண்டு ஒப்புநோக்கற் பாலது.

ஆங்கில மொழிகூட இலத்தீனிலிருந்து சில கூறுகளைக் கடன் வாங்கி வளர்ந்துள்ளது. எண்ணற்ற சொற்கள் ஆங்கிலத்திலும், இலத்தீனின் பேச்சு மொழி (Spoken Latin) எனப்படும் பிரெஞ்சு மொழியிலும் ஒத்துள்ளன ஒரேசொல் ஆங்கிலத்தில் ஒரு மாதிரியாகவும் பிரெஞ்சு மொழியில் வேறொரு மாதிரியாகவும் ஒலிக்கப்படுவது வியப்பே. Table என்பது ஆங்கிலத்தில்"டேபிள்' எனவும் "பிரெஞ்சில்'தாப்ளு எனவும், Latin என்பது ஆங்கிலத்தில் "லேட்டின் எனவும் பிரெஞ்சில் லத்தா(ன்) எனவும், "Page என்பது ஆங்கிலத்தில் பேஜ்’ எனவும் பிரெஞ்சில் பாழ்' எனவும், மற்றும் Invitation என்பது ஆங்கிலத்தில் இன்வைடேஷன் எனவும் பிரெஞ்சில் ஆ(ன்)விதாசிய(ன்). எனவும், “Encouragement” GrGirl ugi ஆங்கிலத்தில் ‘எங்கரேஜ்மெண்ட்’ எனவும் பிரஞ்சு மொழியில் ஆங்கு ராழ் மா(ன்) எனவும் ஒலிக்கப்படுவது வியப்பாயுள்ளது. மொழிகளின் ஒப்புமைப் போக்குக்காக இவை ஈண்டு எடுத்துக்காட்டப்பட்டன. .

வேற்றுமொழியின் செல்வாக்கான - கட்டாயமான ஊடுருவலால் ஒரு மொழி பல மொழிகளாகச் சிதைவதும் உண்டு. தென்னிந்தியத் திராவிட மொழிகளாகிய மலை யாளம், கன்னடம், தெலுங்கு முதலியவை, சமசுகிருத மொழியின் வன்மையான ஊடுருவலாலேயே தமிழினின் றும் வேறுபட்டன. எடுத்துக்காட்டு வேண்டுமெனில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/228&oldid=544884" இலிருந்து மீள்விக்கப்பட்டது