பக்கம்:உலகு உய்ய.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231

பிற துணைகளால், உலக நாடுகள் ஒன்றுக் கொன்று மிகவும் நெருங்கியுள்ளமையால், உலக மக்கள் ஒருவரோ டொருவர் தொடர்பு கொள்ள உலகுக்கு ஒரு பொது மொழி வேண்டும். அது எம் மொழியாக இருக்கக்கூடு மெனில், இப்போது பெரும்பாலும் உலகத்தை இணைத் துக் கொண்டிருக்கின்ற ஆங்கில மொழியாகத்தான் இருக்க முடியும். அங்ங்ண மெனில், உலகத்தார் அனை வரும் ஆங்கிலம் கற்க வேண்டும். சில நாடுகளில் ஆங் கிலம் தெரியாத தலைவர்கள் நாடாளுவது என்னவோ உண்மைதான்! இருப்பினும், இந்நிலைமை எதிர் காலத்தி லும் நீடிக்க முடியாது. இவர்கள் மற்றவர்களோடு தொடர்பு கொள்ள, இடையே, ஆங்கிலம் அறிந்த மொழி பெயர்ப்பாளர் ஒருவர் தேவைப்படுகிறார். இதனால் காலம் வீணாகிறது. எல்லாருக்கும் ஆங்கிலம் தெரிந் திருந்தால் காலப் பாழ் நேராது; பொருள் புலப்பாடும் தெளிவாயிருக்கும்.

எழுத்து அறிமுகம்:

ஆங்கிலத்துக்குத் தகுதி யுண்டாக்க எழுத்தும் ஒரு வகை வாய்ப்பாக உள்ளது. உலகில் பின்னணியில் உள்ள பல மொழிகளோடு முன்னணியில் உள்ள பல மொழிகட் கும் சொந்த எழுத்து இல்லை-இந்தி, குசராத்தி, மராத்தி, நேபளாம் முதலிய மொழிகட்குச் சொந்த எழுத்து இல்லை; இவை, சமசுகிருத மொழியின் (தேவ நாகரி) எழுத்தாலேயே எழுதப்படுகின்றன. இவ்வாறே, ஆங்கிலம் பிரெஞ்சு, இத்தாலியன், ருமேனியன், ஸ்பானியம், போர்த்துகீசியம், செர்மனி, டேனிஷ், டச்சு (ஃஆலந்து) முதலிய மொழிகட்குச் சொந்த எழுத்து இல்லை. இவை இலத்தீன் எழுத்துக்களால் எழுதப்படுகின்றன. ஆங்கிலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/232&oldid=544888" இலிருந்து மீள்விக்கப்பட்டது