பக்கம்:உலகு உய்ய.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233

உரோமன் எழுத்துக்கள் (Roman Letters) graniu() (b. இலத்தீன் எழுத்துக்களாலேயே தத்தம் மொழிகளை எழு தும் ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், போர்ச்சுகீசியர், ஃ ஆலந்துக்காரர் எனப்படும் டச்சுக்காரர், டேனிஷ்காரர் முதலியோர் உலகில் பல்வேறு நாடுகளைப் பிடித்துக் கொண்டு ஆண்டதால், ஆங்கெல்லாம் தத்தம் மொழி யைப் பரப்பினர். இதனால், தம் மொழிக்குச் சொந்த எழுத்து இல்லாத அடிமை நாட்டு மக்கள், ஆட்சியாளர் கள் கற்றுத் தந்த உரோமன் எழுத்துக்களாலேயே தம் மொழியை எழுதலாயினர். மலாய் மொழி வழங்கும் மலேயாவை ஆங்கிலேயரும், அதே மொழி வழங்கும் இந்தோனேசியாவை டச்சுக்காரரும் ஆண்டனர். அதனால் மலாய் மொழி முதலில் உரோமன் எழுத்தால் எழுதப் பட்டது. இப்போது சொந்த எழுத்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றையும் தென் அமெரிக்க நாடுகள் பலவற்றையும், ஆங்கிலேயர், பிரெஞ் சுக்காரர், போர்ச்சுகீசியர், ஸ்பானிஷ்காரர் முதலியோர் ஆண்டதால், அவ்வந் நாட்டு மக்களும், சொந்த எழுத் தில்லாத தம் மொழிகளை உரோமன் எழுத்தால் எழுத லாயினர். சீன மொழியையும் உரோமன் எழுத்தால் எழுத வேண்டும் என்னும் இயக்கம் ஒரு காலத்தில் நடைபெற் றது. ஆனால் அது வெற்றி பெறவில்லை.

இந்தச் செய்தி இங்கே எழுதப்பட்டதன் நோக்க மாவது: ஆங்கிலம் எழுதப்படும் உரோமன் எழுத்து, முன் னமேயே, உலகின் பல்வேறு நாட்டினருக்கும் அறிமுகம் ஆகியுள்ளது; எனவே, ஆங்கிலத்தை உலகப் பொது மொழி யாக்கினால், உலக மக்கள் எழுத்தறிவு பெறவும் எளிதாயிருக்கும்-என்பதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/234&oldid=544890" இலிருந்து மீள்விக்கப்பட்டது