பக்கம்:உலகு உய்ய.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24!

அச்செழுத்தில் பெரிய எழுத்து A என்றும், சிறிய எழுத்து 'a' என்றும் எழுதப்படும். இவ்வாறு எல்லா எழுத்துகளும் பல வரிவடிவங்கள் பெற்றுள்ளன.

இத்தனை வகைகளையும் கற்றுக்கொள்ளக் குழந்தை கள் தொல்லைப்படலாம். அதனால், இருவகை அச்செழுத் துகளும் இல்லாமல், இருவகைக் கையெழுத்துகள் மட்டும் இருந்தால் போதும். பெரிய எழுத்து-சிறிய எழுத்து என இருவகை தேவையா எனில், சில இடங்களில் பெரிய எழுத்தைப் பயன்படுத்தும் மரபு இருப்பதால் பெரிய எழுத்தை வைத்துக் கொள்ளலாம். கையெழுத்தில் பெரிய எழுத்துகளையும் சிறிய எழுத்துகளையும் எவ்வாறு எழுது கிறோமோ, அவையே போன்ற வரிவடிவங்களையே அச் சிலும் உருவாக்கி மொழியை அச்சடிக்கலாம்; அஃதாவது: அச்செழுத்திலும் A-a என்ற வரிவடிவங்களே இருக்க வேண்டும். அறிஞர்கள் இதனை ஆய்க.

“GHOTI”;

'மற்றும், ஆங்கில எழுத்துகளையும் சொற்களையும் ஒலிக்கம் தவறான முறையைச் சுட்டிக் காட்டுவதற்காக, பெர்னார்டுஷா செய்த கிண்டல்-கேலி ஒன்றை இங்கே சொல்லாமல் விடுவதற்கில்லை.

அவர் 'ghoti’ என்னும் ஒரு சொல்லைத் தாமாக அமைத்துக் கொண்டார். இச்சொல் கோ(த்)தி என்று ஒலிக்கப்பெறும். ஆனால், இதனைப் பெர்னார்டுஷா ஃபிஷ்' என-அதாவது-fish என்ற சொல்லை ஒலிப்பது போல ஒலிக்கலாம் என்று சொன்னாராம். அதற்கு அவர் தந்த afforéâlost Gugs: laugh, enough, tough 3Tsärgylh Q&T booir, லாஃப்- யெனஃப்- டஃப்- என ஒலிக்கப்பெறும். இங்கே

– 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/242&oldid=544898" இலிருந்து மீள்விக்கப்பட்டது