பக்கம்:உலகு உய்ய.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

மாறுபடாமல் ஒரே நிலையில் உள்ளது; அதனால் எல்லா ரும் புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பிட்ட ஒரு மொழி யாளர் இலக்கண விதி அமைதியைப் பின்பற்றாமல் கண்ட படி மொழியைக் கையாண்டால் கட்டாயம் மொழி பிரியும் என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டு வருக:

தமிழ் நாட்டின் முப்பெரும் பகுதிகளுள் ஒன்றான சேர நாடு, இப்போது கேரளா என வழங்கப்படுகிறது. இப்பகுதிக்கு மலையாளம்’ என்ற பெயரும் உண்டு. அங்கே பண்டு பேசப்பட்டுவந்த தமிழ், நாளடைவில், மலை நாட்டுத் தமிழ்’ எனவும் மலையாளத் தமிழ் எனவும் மலையாண்மை’ எனவும் வழங்கப்பட்டு, இப்போது மலை யாளம் என்னும் பெயர் உடையதாய் மாறித் திகழ்கிறது. தமிழிலிருந்து மலையாளம் பிரிந்ததற்குக் காரணம், சமசு கிருத மொழியின் ஊடுருவல், மதம், இனம், அரசியல் முதலிய சூழ்நிலை எனக்கூறப்படினும், அங்கிருந்த மக் களுள் பலர் குறிப்பிட்ட தமிழ் இலக்கண விதியைப் பின் பற்றாமையே உண்மையான காரணமாகும். தமிழ் தொடர்பான பேச்சு வடிவமும் சமசுகிருதம் கலந்த பேச்சு வடிவமும் இடைக்காலத்தில் இருந்து வந்தன. இப்போது, இந்த இரண்டும் கலந்த வடிவம் ‘மலையாளம்’ என்னும் பெயரில் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றது.

'துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் இப்போதுள்ள மலையாள மொழி எழுத் துக்களை உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது. மலை யாளத்தில் அச்சன்’ என்பதற்குத் தந்தை என்பது பொருள். முதலில் எழுத்துக்களை உருவாக்கியவராதலின் எழுத்துக் களின் தந்தை என்னும் பொருளில் அவருக்கு எழுத்தச் சன் என்னும் சிறப்புப் பட்டப்பெயர் வழங்கப் பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/245&oldid=544901" இலிருந்து மீள்விக்கப்பட்டது