பக்கம்:உலகு உய்ய.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249

'யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு’. (397)

என்பது திருக்குறள் பாடல். மக்கள் அனைவரும் உறவி னர் - மக்கள் இனத்துக்கு எல்லா இடமும் சொந்த இட மாகும் - என்னும் இக்கருத்து, ஒரே உலகக் கோட்பாட்டுக் குத் தெரிந்தோ - தெரியாமலோ இடப்பட்ட வித்து ஆகும். பழைய தமிழ்ப் புலவர் பலர், உலகக் கண்கொண்டே தம் நூல்களைத் தொடங்கியுள்ள பகுதிகள் மீண்டும் வருக; உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறளை, அதன் ஆசிரியர் திருவள்ளுவர், உலகக் கண்கொண்டே முதற் பாடலைத் தொடங்கியுள்ளார்:

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு".

என்பது திருக்குறளின் முதற் பாடலாகும். நக்கீரர் என்னும் மாபெரும் புலவர், தமது திருமுருகாற்றுப்படை என்னும் நூலை 'உலகம் உவப்ப' என்னும் தொடரால் தொடங்கி யுள்ளார். ஐம்பெருந் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றாகிய மணிமேகலை என்னும் நூலை, அதன் ஆசிரியர் சாத்த னார், 'உலகம் திரியா’ என்னும் தொடரால் தொடங்கி யுள்ளார். பாவேந்தராகிய கம்பர் பத்தாயிரத்திற் கும் மேற்பட்ட பாடல்களையுடைய தமது இராமா யண நூலை, 'உலகம் யாவையும்’ என்னும் தொடரால் தொடங்கியுள்ளார். சேக்கிழார் என்னும் சிறந்த புலவர் தமது பெரிய புராணம்’ என்னும் அரிய புராண நூலை, 'உலகு எலாம்” என்னும் தொடராலேயே தொடங்கியுள் ளார். "ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது திருமூல ரின் திருமந்திரமொழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/250&oldid=544906" இலிருந்து மீள்விக்கப்பட்டது