பக்கம்:உலகு உய்ய.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25]

உலக ஒருமைக் கழகம்:

பிற்காலத்தவராகிய வடலூர் இராமலிங்க வள்ளலார் ஒருவகை உலக ஒற்றுமைக் கழகமே ஏற்படுத்திவிட்டார் எனக் கூறலாம். அவரது சங்கத்தின் பெயர், சமரச சுத்த சன்மார்க்க சங்கம்’ என்பதாகும். சமரசம்’ என்னும் சொல் உலகப் பொதுமையைக் குறிக்கின்றது. அவர் கூறி யுள்ளார்: "கலகம் விளைத்துக் கொள்ளும் உலக மக்களின் பித்து - பிதற்றல்கள் என்று ஒழியுமோ? சமரச சன்மார்க்க சங்கம் என்றைக்கு உலகெங்கும் பரவுமோ? உலகம் முழு தும் ஒற்றுமையான - ஒருமைப்பாடு ஒங்குக என்று சங்கு கள் முழங்கத் தொடங்கிவிட்டன; பெருமைக்கு உரிய சம ரச சுத்த சன்மார்க்க சங்கத்தைப் பெரியவர்கள் சூழ்ந்து கொண்டு பெரும் புகழ் பேசத் தொடங்கி விட்டனர் என்று கூறியுள்ளார். பாடல்கள் வருமாறு:

"பித்தெலாம் உடைய உலகர்தம் கலகப்

பிதற்றெலாம் என்று ஒழிந்திடுமோ சத்தெலாம் ஒன்றென்று உணர்ந்த சன்மார்க்க

சங்கம் என்று ஒங்குமோ...'

'ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே

ஊதின சின்னங்கள் ஊதின சங்கம் பெருமை கொள் சமரச சுத்த சன் மார்க்கப்

பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்’

என்பன அவர்தம் பாடல்கள். எம்மதமும் சம்மதம் என் னும் கொள்கையுடைய அவர், சாதி - குலம்-கோத்திரம் -சமயம் - மதம் முதலிய வேறுபாடுகளையும் இழித்துப் பழித்துச் சாடியுள்ளார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/252&oldid=544908" இலிருந்து மீள்விக்கப்பட்டது