பக்கம்:உலகு உய்ய.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253

அமைக்க வேண்டும். பிணக்குத் தீர்க்கப் பொதுமன்றமும் பொதுப் படையும் இருக்கவேண்டும் - இன்ன பிற இவர் திட்டங்களாகும்.

1623-இல், எமரிக் குரூஸ் என்னும் துறவி, உலக ஒற்றுமைத் திட்டம் பற்றி வெளியிட்டார். உலகநாடுகளி டையே வாணிக உரிமை இருக்கவேண்டும்; உலகச் சட்ட மன்றம், உலக நீதி மன்றம் அமைய வேண்டும்; உலகில் அமைதி நிலவவேண்டும் - இன்ன பிற அவர்தம் திட்டங்

களாகும்.

'வில்லியம் பென்'(William Penn)என்பார் 1693-இல் ஒரு கட்டுரை வெளியிட்டார். அதில் அவர் கூறியன:-ஐரோப் பிய இளவரசர்கள் ஒன்றுகூட வேண்டும்; அனைத்துலக வழக்குகளைத் தீர்க்க உலகப் பொதுச் சட்டம் உருவாக்க வேண்டும்; அனைத்துலகச் சட்ட மன்றம் (Parliament) நிறுவ வேண்டும் - இன்ன பிற வாகும்.

பிரெஞ்சுப் பேரறிஞர் ழான் ழாக் ரூசோ' 1761-இல் ஒரு நூல் வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளவை:அனைத்துலக நிலையம் - வலிமை மிக்க உலக நாடுகளின் கூட்டமைப்பு வேண்டும்; சட்டங்களை உருவாக்கவும் செயல்படுத்தவும் பொதுமன்றம் வேண்டும். இவற்றை ஒழுங்குறுத்த அனைத்துலக ஒப்பந்த உறுதி செய்து கொள்ள வேண்டும் இன்ன பிறவாகும்.

“G)ggiflus) G)L1Göt 5th" (Jeremy Bentham) gTGörl Joufi 1786 -89 ஆம் ஆண்டுக் கால அளவில், அனைத்துலகச் சட்டக் Q3 Tsit 6953,6st” (Principles of International Law) GTsörgylb நூல் எழுதி வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பவை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/254&oldid=544910" இலிருந்து மீள்விக்கப்பட்டது