பக்கம்:உலகு உய்ய.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

முதலியனவும் கடவுளால் ஏன் கொடுக்க முடியவில்லை? எனவே, பிள்ளைப் பேறு கடவுளின் செயல் அன்று; மாந் தரின் செயலே. ஒரு சிலர்க்கு ஒரு பிள்ளையும் பிறக்காமை யும் வேறு சிலர்க்குச் சில பிள்ளைகளே பிறப்பதும், மற் றையோர்க்கு மிகுந்த பிள்ளைகள் பிறப்பதும் இயற்கையின் அமைப்பாகும். எனவே, கடவுள் பெயரைக் கெடுக்கலா

காது.

அடுத்த காரணம்: பிள்ளையின்ப மாகும்: பிள்ளைகள் இருவர் மூவரால் பெறும் இன்பம் போதாதா? மிகுதியான பிள்ளைகளால் துன்பமே யன்றி இன்ப மில்லை என்பதை

யாரும் அனுபவத்தால் அறியலாம்.

அடுத்தது: உடைமைகளைத் துய்க்க: இருக்கும் பிள் ளைகள் துய்த்தால் போதும். மிகுதியான செல்வத்தில் குறிப்பிட்ட பகுதியைச் சமுதாயத்துக்கு அளித்து விட வேண்டும். தம் பிள்ளைகளும் உழைத்து வாழவேண்டும்.

அடுத்தது. இறுதிக் காலத்தில் பெற்றோரைப் பேணிக் காக்க: இஃது ஒத்துக் கொள்ளவேண்டியதே. இருவர் -மூவர் பேணிக் காக்கப் போதாதா? அளவற்ற பிள்ளை கள் இருப்பின், அந்தப் பிள்ளையிடம் போ - இந்தப் பிள் ளையிடம் போ எனப் பிள்ளைகள் பெற்றோரைப் பிடித்துத் தள்ளுவதைப் பார்க்கிறோமே! சில இடங்களில் மகன் ஒத்துக்கொள்ளினும் மருமகள் ஏற்றுக் கொள்வதில்லையே! 'மூன்று பிள்ளைகள் பெற்றவர்கட்கு முக்கூட்டில் சோறுநான்கு பிள்ளைகள் பெற்றவர்கட்கு நாற்சந்தியில் சோறு' (அ..தாவது பிச்சைச் சோறுதான்) - என்னும் ւմ էք மொழி ஈண்டு நினைவு கூரத் தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/27&oldid=544685" இலிருந்து மீள்விக்கப்பட்டது