பக்கம்:உலகு உய்ய.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271

4. உலகம் தழிஇயது ஒட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்லது அறிவு” (425)

உலகினரைத் தழுவிக் கொண்டு ஒத்துப்போவதே உயர் அறிவு; இன்பத்தில் விரிவதும் துன்பத்தில் குவிதலும் இல் லாததே நல்லறிவு.

5. "எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு” (426)

உலகம் எவ்வாறு அமைந்து வாழ்கிறதோ, அவ்வாறே உலகத்தோடு ஒன்றி அமைந்து வாழ்வதே அறிவுடைமை யாகும்.

3

6. எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும்தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு” (470)

தம் நிலைக்கு ஒவ்வாத செயல் முறைகளை உலகம் ஏற் றுக் கொள்ளாது; ஆதலின், எவரும், உலகம் இகழாத செயல்களாக எண்ணிப் பார்த்துச் செய்ய வேண்டும்.

7. 'கெடா அ வழிவந்த கேண்மையார் கேண்மை

விடாஅர் விழையும் உலகு” (809)

இடையே கெடாமல் வழிவழியாகத் தொடர்ந்து பழகு பவரின் தொடர்பைக் கைவிடாதாரை உலகம் விடாது விரும்பும்.

8. பகைநட்பாக் கொண்டொழுகும்பண்புடையாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு” (874)

பகைவரையும் நண்பராக மாற்றி ஒழுகும் பண்பாளனது உயர் தகுதியோடு உலகம் ஒத்துத் தங்கியிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/272&oldid=544928" இலிருந்து மீள்விக்கப்பட்டது