பக்கம்:உலகு உய்ய.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

281

வற்றிலிருந்து தொடங்கி, வடமேற்கே உள்ள துருக்கிதென்மேற்கே உள்ள சவூதி அரேபியா ஆகிய பகுதிக்குள் ளும் சிறிது வெளியேயும் அடங்கியுள்ள நாடுகள், சுற்றுப் புறச் சூழல்கள் ஆகியவை இதில் அடங்கும்.

8. இந்திய-சுற்றுப்புற மண்டலம்: இந்தியா, இலங் கை, நேப்பாளம்,பூட்டான், வங்காள தேசம், மாலத் தீவு கள், சுற்றுப்புறச் சூழல்கள் ஆகியவை இதில் அடங்கும்.

9. சீனா-ஜப்பான்-சுற்றுப்புற மண்டலம்: சீனா, ஜப் பான், மங்கோலியா, கொரியா, ஹாங்காங் (Hongkong), சுற்றுப் புறச் சூழல்கள் ஆகியவை இதில் அடங்கும்.

10. தெற்கு-தென்கிழக்கு ஆசிய மண்டலம்: பார்மோசா (Formosa), வியட்நாம், கம்போடியா, லாவோஸ், பர்மா, தாய்லாந்து, மலேசியா (மலாய், சாரவாக், பார்னியோ வின் ஒரு பகுதி உள்ளிட்டது மலேசியா), சிங்கப்பூர், போர் னியோ, இந்தோனேசியா (ஜாவா, சுமத்ரா முதலிய தீவு கள் அடங்கியது), ஃபிலிப்பைன்ஸ் (The Philippines),சுற்றுப் புறச் சூழல்கள் ஆகியவை இதில் அடங்கும்.

ஒரு மாதிரிக்காகவே மேலே பத்து மண்டலப் பாகு பாடு கொள்கையளவில் தரப்பட்டுள்ளது. இதுவே முற்ற

முடிந்த முடிவு அன்று. உலக அறிஞர்கள் கூடி, இன்னும் வேறு விதமாகவும் மண்டலப் பாகுபாடு செய்யலாம்.

ஆட்சிமுறையும் சீர்த்திருத்தங்களும்:

சாதி, மதம், இனம், மொழி, நிறம் முதலிய வேற்று

மைக்கு இடமில்லை. உலக மக்கள் அனைவருக்கும் ஒரே

மாதிரியான சட்ட திட்ட விதிகள் இருக்கவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/282&oldid=544938" இலிருந்து மீள்விக்கப்பட்டது