பக்கம்:உலகு உய்ய.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

செய்ய முடியாது. ஆள்பவர் தவறைத் திருத்திக் கொள்ள லாம். இவையாவும் நட்புச் சூழ்நிலையில் நடைபெறும்.

ஆங்கிலமே ப்ொது மொழி:

இப்போது உலக நாடுகள் யாவற்றிலும் அறியப்பட்டு உலகப் பொது மொழியாக இயங்கி வருவது ஆங்கில மொழியே. உலகப் பொது அரசாகிய ஒரே உலக அரசின் பொதுமொழியாக-ஆட்சி மொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டும். உலக மக்கள் அனைவரும் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வசதியும் வாய்ப்பும் உண்டாக்கித் தரல்வேண்டும். உலக மக்கள் அனைவரும் ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் வல்லவராய் விளங்க வேண்டு

நீதி மன்றங்கள்:

ஒரே உலக அரசின் நீதி மன்றங்கள் எப்படி இருக்க வேண்டும்? தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லு தல்"என்னும் உளவியல் Qpan spoil slo (Psychological Method), தெரிந்த இந்திய நீதி மன்றங்களிலிருந்து இன்னும் தெரி யாத உலக நீதி மன்ற அமைப்புக்குப் பயணம் தொடங்கு வோம். இந்திய அமைப்புமுறை வருமாறு:- -

பல ஊர்கள் சேர்ந்தது ஒரு சிறு வட்டம் (Taluk) -தாலுகா) எனப்படும். ஒவ்வொரு சிறு வட்டத்தின் தலை நகரிலும் நீதி மன்றம் உண்டு. பல சிறு வட்டங்கள் சேர்ந் தது ஒரு பெரிய மாவட்டம் (District-ஜில்லா) எனப் படும். ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரிலும் நீதி மன் றம் உண்டு. பல மாவட்டங்கள் சேர்ந்தது ஒரு மாநிலம்’ (State) ஆகும். ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் நீதி மன்றம் உண்டு. மாநில நீதி மன்றத்திற்கு உயர் நீதி மன்றம்’ (High court) என்று பெயராம். பல மாநிலங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/287&oldid=544943" இலிருந்து மீள்விக்கப்பட்டது