பக்கம்:உலகு உய்ய.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293

அனைத்தையும், ஆழமாகப் பள்ளம் தோண்டி மண்ணுக்கு அடியிலே போட்டு மறைத்து விடவேண்டும்.

உலகப் பொது அரசில் காவலர் (போலீஸ்) படையை வன்மை உடைய தாக்கினால் போதும். போர்ப் படைஞர் வேண்டியதில்லை. மக்களுக்கு இடையே ஏற்படும் கலகங் களை அடக்கக் கண்ணிர்ப் புகைக்குண்டுகளும் தோட்டா' போட்ட துப்பாக்கிகளும் இருந்தால் போதும். இவற்றைக் கொண்டு கலகங்களையும் வன்முறைகளையும் அகற்றி விடலாம். கோடிக் கணக்கில் பணம் செலவிட்டுச் செய்து வைத்துள்ள பல்வேறு படைக்கலங்களையும் மண்ணுக்குள் மறைத்துத்தான் ஆகவேண்டும். வல்லரசுகளும் சரி - மெல்லரசுகளும் சரி - பரந்த மனப்பான்மையுடன் இதைச்

செய்ய வேண்டும்.

உலகப் பொது அரசில் சேர்வதால் வளம் நிறைந்த நாட்டினர், தம் வளத்தை மற்ற நாடுகட்குப் பங்கிட வேண்டியிருக்கும். இதற்கும் பரந்த மனப்பான்மை வேண் டும். மக்களினத்தில் ஒருவர் பட்டினி கிடப்பினும், அது மக்களின முழுவதின் தோல்வியாகும் என்பதை அனை வரும் உணர வேண்டும்; உணர்ந்து அதற்கேற்பச் செயல்

படவேண்டும்.

"தனி ஒருவனுக்கு உணவு இல்லை ப்ெiல் இந்தச் செகத்தினை அழித்திடுவோம்'.

என்னும் சுப்பிரமணிய பாரதியாரின் பாடற் கருத்து

ஈண்டு மீண்டும் நினைவுக்கு வரவேண்டும்.

உலக மக்கள் அனைவரும் எல்லாத் துறைகளிலும் நட்புறவுடனும் விட்டுக் கொடுக்கும் தியாக உணர்வுட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/294&oldid=544950" இலிருந்து மீள்விக்கப்பட்டது