பக்கம்:உலகு உய்ய.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பிற் சேர்க்கை

உலக அரசு ஆதரவு மாநாடு

  • யான் இந்த நூலை எழுதி முடித்த பின்னர், 1981 பிப்ரவரி 22ஆம் நாள், தென்னிந்தியாவில் வெளியாகும் 'தின மணி’ என்னும் தமிழ் நாளேட்டில் (The Widest Read Tamil Daily) “937 a.605 off o' Q&TLjust or செய்தி ஒன்று இருந்ததைப் படித்தேன். அச் செய்தியை இந்நூலின் பிற்சேர்க்கையாக, அந்த நாளேட்டில் உள் ளாங்கு அப்படியே கீழே தருகிறேன்:

'தினமணி-ஞாயிற்றுக்கிழமை-பிப்ரவரி 22, 1981

டில்லியில் உலக அரசு ஆதரவு மாநாடு தொடக்கம்

புதுடில்லி, பிப்ரவரி 21-மனித வர்க்கம் முற்றிலும் அழியாமல் காப்பாற்றச் சகிப்புத் தன்மையும் பரஸ்பர நல்லுறவும் உலகநாடுகளின் மக்களிடையே ஏற்படுவது அவசியம் என்று (இந்தியப் பார்லிமெண்ட்) லோக சபை சபாநாயகர் பலராம் ஜாகர் இன்று கூறினார்.

உலக நாடுகள் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின் றன. எந்த நாடும் முற்றிலும் தன்னிறைவு உடையதாக இல்லை என்று அவர் சொன்னார்.

  • இந்த நூல் 1980 ஆம் ஆண்டு எழுதப்பெற்றது. பின் னர் அடுத்த ஆண்டுகளில் இடையிடையே சிலசெய்திகள் சேர்க்கப் பெற்றன.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/305&oldid=544961" இலிருந்து மீள்விக்கப்பட்டது