பக்கம்:உலகு உய்ய.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

என்று சிலர் கூறலாம். இங்கே எனது பட்டறிவைக் கொண்டு, இந்தக் கொள்கையை மறுக்க முற்படுவேனாக'

என் தந்தையார் என்னைத் தவிர மற்ற பிள்ளை களைப் படிக்க வைக்க வில்லை - முன்னுக்குக் கொண்டு வரவில்லை. மற்றவர்களுள் சிலரையாவது படிக்கவைத் திருந்தால் அவர்களும் நல்ல பெயர் சொல்லியிருப்பர். என்னைப் பெற்றிருக்க வேண்டியதில்லை. பிள்ளைச் சுமை யின் மிகுதியினால் ஒன்றும் செய்ய முடியாமற் போயிற்று. எல்லாப் பிள்ளைகளையும் கெடுத்து விட்டோமே. ஒரு பிள்ளையையாவது முன்னுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற பொறுப்புணர்வு இறுதியிலாவது அனுபவத்தின் வாயி லாகத் தோன்றியதால் என்னையாவது முன்னுக்குக் கொண்டுவந்தார் போலும்.

எங்கள் பன்னிருவருள், மூவர் குழந்தைப் பருவத்தி லேயே இறந்து போக, தமக்கையர் இருவர் பிளளைப் பேற்றின் போது இறந்து போக, மீதி எழுவரே ஓரளவு நீண்ட நாள் நிலைத்தோம். எங்கள் பெற்றோர் இருவரும் இறந்து போயினர். பிள்ளைகளாகிய யாங்கள் எழுவருள் நால்வர் ஆடவர் - மூவர் பெண்டிர். இந்தப் பெண்கள் மூவரும் சிற்சில சமயங்களில் தாய் வீட்டுக்கு வந்து போவது வழக்கம். இஃது உலகியலே. இந்தப் பெண்கட்குச் சோறு போட வேண்டி நேர்ந்ததாலோ அல்லது வேறு எக்காரணத்தாலோ, என் பெரிய அண்ணனின் மனைவி யாகிய என் பெரிய அண்ணியார், 'ஏழு குட்டி போட்டு விட்டுப் போனாள், இன்னும் தொலைக்கிறேன் - ஏழு குட்டி போட்டு விட்டுப் போனாள், இன்னும் தொலைக் கிறேன்” - என, இறந்து போன என் அன்னையாரைக் குறிப்பிட்டு அடிக்கடி வைவது வழக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/31&oldid=544689" இலிருந்து மீள்விக்கப்பட்டது