பக்கம்:உலகு உய்ய.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

அளவு கடந்த பற்று - பாசம் வைத்திருந்த என் பெற்றோர் பால் மிக்க கடமையுணர்வு உடையவனே.

என் சொந்த வரலாற்றை இங்குக் குறிப்பிட்டமைக் காகப் பொறுத்தருள வேண்டுகிறேன். பட்டறிவு வாயி லாகச் சில படிப்பினைகளை எடுத்துக்காட்டவே என் சொந்த வரலாற்றை ஈண்டு தந்தேன். சில படிப்பினை களாவன: (1) மிகுதியான பிள்ளைகளைப் பெற்றமை யால், எல்லாரையும் சிறந்த முறையில் பேணிக்காக்க முடி யாமை’(2) இளம் பருவத்திலேயே சிலர் இறக்கநேர்ந்தமை. (3) அடிக்கடிப் பிள்ளைகளை இழந்தமையால் பெற்றோர் கள் பெருந்துயர் எய்தியமை, (4) எல்லாப் பிள்ளைகட்கும் எதிர்காலத்துக்கு வேண்டிய வாய்ப்பு வசதிகட்கு வித்து இட முடியாது போனமை. (5) சாகுங் காலத்தில் என்னை ஆதரவு இன்றி விட்டுப் போகின்றமை குறித்து ஆற்றொ ணாத்துயரம் அடைந்தமை. (6) எல்லாவற்றுக்கும் மேலாக இறந்த பிறகும், பல குட்டி போட்டு விட்டுப் போனார் கள் என என் அண்ணியாரின் வசை மொழிகளை வாங் கிக் கட்டிக் கொண்டமை. இன்ன பிற. இந்தத் தீமைகள் யாவும் மிகுதியாகப் பிள்ளைகள் பெறுவோர்க்கு உண்டு என்பதைப் படிப்பினையாகக் கொள்ளலாம். பெற்றோர் கள் ஆண்மகன் ஒருவனையும் பெண்மக்கள் எழுவரையும் பெற்றுப் போட்டுவிட்டுப் போன குடும்பங்களில், ஆண் மகன் ஒருவன், உடன் பிறந்த பெண்கள் எழுவர்க்கும் திரு மணம் செய்து வைக்கவும் தொடர்ந்து சீர் வரிசைகள் செய்து கொண்டிருக்கவும் படும் பாடு சொல்லும் தரத்த தன்று. இந்த நிலையை ஏற்படுத்திய பெற்றோர்கள் பெரும் பாவிகளே.

அடுத்து,- பிள்ளைகளை மிகுதியாகப் பெறுவதற்கு உரிய முதன்மையான பெரிய காரணம் காமப் பசியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/33&oldid=544691" இலிருந்து மீள்விக்கப்பட்டது