பக்கம்:உலகு உய்ய.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

திருப்பதாக ஒரு கருத்து கூறப்படுகிறது. அமாவாசை நாளில் மட்டும் சிறிது தொலைவு கூட நடக்க இயல வில்லை எனக் கற்றறிந்த அம்மையார் ஒருவர் பலமுறை கூறியதை யான் கேட்டிருக்கிறேன். இவ்வாறு இன்னும் பல நடை முறைகளைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். எனவே, கோள்களுக்கும் உயிர்களுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது என்பதை நம்பலாம் போலும்!

ஆனால், இந்தக் காலத்தில், போதிய அறிவியல் ஆராய்ச்சி யில்லாதாரால் பார்த்துச் சொல்லப்படும் கணி யம் (சோதிடம்) என்னும் பெயரால், காலத்தையும் காசையும் செலவிட்டுக் கவலையை விலைக்கு வாங்கிக் கட்டிக் கொள்வது ஏற்புடைத் தாகாது.

கடவுள் வழிபாடு:

கடவுள் வழிபாடு என்பது, ஒரு வகை மன ஆறுதலை 'மன நிறைவைத் தருவது. இதனை ஒருவகை உளவியல் un(5$gjaith” (Psychological Treatment) arsirp Gepartib,அவ்வளவே. இஃது அளவோடு இருக்க வேண்டும். மிகுந்த பொருளையும் காலத்தையும் முயற்சியையும் இதில் செல விட்டு வீணாக்கி, பின்னர், நினைத்தது நிறைவேறாதாயின் கடவுளை நோவதில் பயன் இல்லை.

எனவே, மக்களினம், இனியாயினும் எல்லா வகை யான மூட நம்பிக்கைகட்கும் மூடப் பழக்க வழக்கங்கட்கும் பெரிய முற்றுப் புள்ளி வைத்துவிட்டு வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டு, ஆக்க வேலைகளில் காலத்தை யும் முயற்சியையும் செலவிடுவதே உய்யும் வழியாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/69&oldid=544727" இலிருந்து மீள்விக்கப்பட்டது