பக்கம்:உலகு உய்ய.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

துரிமை இல்லையெனில், ஒருவருக்கும் ஊக்கம் உண்டா காது; ஒவ்வொருவரும் ஏதோ ஒரளவே உழைப்பர். எனவே, பொதுவுடைமையினும் தனியுடைமையே மேலானது என்பது சிலரது வாதம்.

பொதுவுடைமை யின்றித் தனியுடைமையிருப்பின், வாய்ப்புள்ள ஒருசிலர் மட்டுமே ஊரையடித்து உலையில் போட்டுக் கொள்வர். செல்வம் பரவலாகச் செல்லாமல் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே குவிந்துவிடும். இதனால் சிலர் மட்டுமே இன்புறவும் பலர் துன்புறவும் நேரும். எனவே, தனியுடைமை கூடாது - பொதுவுடைமையே வேண்டும் - என்பது சிலரின் வாதம்.

பொதுவுடைமை நாடுகளில் தனித் தன்னாட்சி’ (சர்வாதிகாரம்) நடைபெறுவதாகவும், சொத்துரிமை இன் மையோடு, பேச்சுரிமை - எழுத்துரிமை - இன்னபிற அடிப் படை உரிமைகளும் இல்லை என்பதாகவும் ஒரு கருத்துக் கூறப்படுகிறது. இக் கொள்கையைப் பின்பற்றாத நாடு களில், சொத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை முதலிய சனநாயக - மக்களாட்சி உரிமை யாவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே, சர்வாதிகார - வல்லாட்சி’ வேண்டா - சனநாயக - மக்கள் ஆட்சியே வேண்டும் என் பது ஒருவகை வாதம். இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டுமே !

சனநாயக சோஷலிசம்:

'சன நாயகம் (Democracy) என்பது மக்களாட்சி முறையாகும். இதில், மக்களுக்குச் சொத்துரிமை, பேச்சு ரிமை, எழுத்துரிமை முதலிய உரிமைகள் யாவும் உண்டு. 'சோஷலிசம் (Socialism) என்பது, பொதுவுடைமைக் கொள்கைச் சார்பாகும். இதில், மக்களுக்குப் பேச்சுரிமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/92&oldid=544749" இலிருந்து மீள்விக்கப்பட்டது