பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 121 ਾਂ உடற்கல்வி ஜெர்மனியின் அடிமை நிலை ஐரோப்பா கண்டத்தின் இதயம்போல, ஜெர்மனி நடுவிலே இடம்பெற்றிருக்கிறது. அதனால் அதன் ஆதிக்கம் மேலோங்கும்போது, ஐரோப்பா முழுவதும் மட்டுமல்ல; உலகம் முழுவதற்கும் ஒரு உணர்வூட்டும் மையமாகவே விளங்கியிருக்கிறது. அதற்கு சான்றாக, நெப்போலியன் ஜெர்மனியை வென்று பிரான்சின் கீழ்கொண்டு வந்தபோது, அவன் உலக ஆதிக்கத்தைத் தன் கைப்படுத்தினான் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றார்கள். 16ம் நூற்றாண்டில் ஜெர்மனியானது 300 குறு மாநில அமைப்புக்களின் தொகுப்பாக (Soveregn State) அமைந்த தாகும். அந்த மாநில அமைப்புக்கள் அரசியலைப் பின்னணியாகக் கொள்ளாமல், மத உணர்வின் அடிப்படையிலே தான் ஒன்றுபட்டுக் கிடந்தது. நெப்போலியன் ஜெர்மனியை வென்று அடிமைப் படுத்தியபோதுதான். அரசியல் தலைவர்கள் மட்டும் அல்லாது, அரசியல் நோக்கர்கள் எல்லோரும் ஒன்றை, உறுதியாக நம்பத் தொடங்கினர், அதாவது, அந்நிய ஆதிக்கத்தை ஜெர்மனியிலிருந்து அகற்ற வேண்டுமானால், மக்களுக்கு உடல்வலிமை, (Fitness) உண்டாக வேண்டும் என்பதை உணர்ந்தனர். அந்த நம்பிக்கைதான் உடற்