உலக நாடுகளில் உடற்கல்வி 137 ஆனால், இவர் ஜெர்மன் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி முறையை நீக்கிவிட்டு, ஸ்வீடன் நாட்டு முறையைப் பின்பற்றத் தொடங்கியதால் எதிர்ப்புகள் ஏற்படவே இயக்குநர் பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று. மக்களுக்குப் பயிற்சியளிக்கும் ராயல் சென்ட்ரல் இன்ஸ் டிட்யூட், மேலும் விரிவடைந்து, உடற் கல்வி ஆசிரியர்களை உருவாக்கும் பயிற்சி நிறுவனமாகமாறியது. 1860ம் ஆண்டிலிருந்து ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1862ம் ஆண்டு, ஜிம்னாஸ்டிக்ஸ் கட்டாயப் பாடமாக, ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு ஆக்கப்பட்டது. - வாரத்திற்கு 2 மணியிலிருந்து 3 மணி நேரமாக பயிற்சி வகுப்பின் கால நேரம் நீட்டிக்கப்பட்டது. 1892ம் ஆண்டு முதல், பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு, உடற்கல்விக் கட்டாயப் பாடமாக ஆக்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியராகத் தகுதிபெற, மாநில அளவுத் தேர்வில், உடற்கல்வித் தேர்விலும் செய்முறையிலும் தேர்வு பெற்றிருக்க வேண்டும் என்ற நிலைமையில் தெளிவும் பொலிவும் ஏற்பட்டு சிறப்புப் பெற்றது. இதிலென்ன குறிப்பிடத்தக்க அம்சம் என்றால், பள்ளியில் பணிபுரிகிற மற்ற ஆசிரியர்களுக்கு இணையாக உடற் கல்வி ஆசிரியர்கள் உரிமையும், வாய்ப்பும் சம அந்தஸ்தும் பெற்றிருந்ததுதான். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், உடற்கல்வித் திட்டங்களில், வெளிமைதானத்திலும் விளையாட்டுக்களை ஆடி மகிழ வாய்ப்பளித்திட வேண்டும், என்பது கொள்கையாகப் பரவியது. இதற்கு கோக், ஹெர்மன், எமில்
பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/137
Appearance