பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா _ இவரது இலட்சியமானது, மனிதர்கள் கிழத்தன்மை அடைந்தாலும், உடலில் கிளர்ந்தெழுகின்ற ஆற்றலும் திறமையும், சக்தியும் தொடர்ந்து வரவேண்டும். அதற்கு உடற் பயிற்சிகள் உதவவேண்டும் என்பதுதான். இவர் ஜெர்மனியின் லிங் ஜிம்னாஸ்டிக்ஸ் முறைகளில் நிறைந்த ஈடுபாடுகொண்டிருந்தார் அதன் அடிப்படையில், டென்மார்க்கு, ஜிம்னாஸ் டிக்ஸ் முறைகள் எனும் பெயர் வழங்கும் படி, புதுமுறையில் பயிற்சிகளை வடிவமைத்து வழங்கினார். -- ஜிம்னாஸ்டிக்ஸ், பயிற்சிகளில் இசையோடு இயைந்த இதமான அளவுகள் (Rhythem) இருந்திடவேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதற்கேற்ற வழிகளில் பல உத்திகளைக் கையாண்டார். கைகள், கால்கள், கழுத்து, முதுகுப்பகுதியின் பல மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பயிற்சிமுறை என்பதாக இவர் உருவாக்கித்தந்த பயிற்சி முறைகள், உலகெங்கினும் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தன. இவர் நிகழ்த்திய அமெரிக்கா விஜயமும், (1925) தென் ஆப்பிரிக்கா நாட்டு பயணமும் (1929) இவருக்கு நல்ல அனுபவங்களை நல்கின. தனது நாட்டிற்கு அந்த அனுபவங்கள் பல புதிய மரபுகளை ஏற்படுத்தித்தர உதவின. டென்மார்க்கில் உடற்கல்வி: 1. மற்ற பாடங்களைப் போலவே, உடற்கல்வியும் சம அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. 2. தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் பெறுகின்ற மதிப் பெண்கள் தேர்வுதர பயன்படுத்தப்படுகின்றன.