பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி - 177 8. தன்னுடைய திறமைகளை, மனப்பாட்டை, நினவுகளை வெளிப்படுத்தி. மனமகிழச் செய்வதுடன், தன்னையே ஒரு சோதனைக்களமாக்கி, தன் தகுதி என்ன, நிலைமை என்ன எவ்வாறு வளர்ப்பது, புகழ் சேர்ப்பது போன்றவற்றை எண்ண வைத்து, வாய்ப்புகளைக் கொடுத்து, திருப்தியான வாழ்வினை அமைத்துத் தருகிறது. 9. ஓய்வுக்காலத்தையும் சுறுசுறுப்பாக இயங்க வைத்து, செழிப்பான வாழ்நாளைத் தொகுத்துத்தருகிறது. இங்கிலாந்து மக்களின் இத்தகைய நம்பிக்கைகளே அவர்களை உலகை ஆள்கின்ற வகையில் உயர்ந்த திறமையை வளர்த்தது. அதனால் சரித்திரத்தில் பிரசித்தமான பக்கங்களாக அவர்கள் வரலாறு பதிந்தது.