பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 237 --- கொண்டது. அதாவது அவர்களின் கடமை தொழிலாக மாறி விட்டது. ஆகவே, தொழிலைச் செய்த காரணத்தால், தொழிற் பிரிவுகள் தோன்றத் தொடங்கின. அதுவே சாதிப் பிரிவாக பிற்காலத்தில் சரியத் தொடங்கியது. -- இந்திய வாழ்க்கை அமைப்பில், நான்கு பிரிவுகள் இப்படியாக நடமாடத் தொடங்கின. அதாவது ஆசிரியர்கள் வீரர்கள், வணிகர்கள், வேலையாட்கள் என்பதாக, பிரிவுகள் பிளந்து வந்தன. இவர்களே பின்னாளில், பிராமணர்கள், கூடித்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்க்ள என்று அழைக்கப் பட்டனர். * ஆசிரியர்கள்: இவர்கள் அனைவருக்கும் கலைகளைக் கற்பித்து வந்ததால், ஆசிரியர்கள் என்று அழைக்கப்பட்டனர். அந்தணர்கள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவர்கள் மந்திரம் ஜெப தபம் இவற்றில் ஈடுபட்டதுடன், தாங்கள் குடியிருக்கும் பாண சாலையில் கல்வி மற்றும் போர்க்கலைகளையும் கற்பிக்கின்ற பொறுப்பினை ஏற்றும் வாழ்ந்தனர். அவர்கள் கூடித்திரியர்களுக்குப் பாடங்களைப் போதித்ததுடன், போர்க்கலையையும், ஆயுதங்களைப் பயன்படுத்தும் நுணுக்கங்களையும், ஆட்சி செய்யக்கூடிய அறிவுத் திறன்களையும் கற்றுத்தந்தனர். அதில் வில்வித்தை, கத்திச் சண்டை, ஈட்டிச் சண்டை அல்லது வேல் சண்டைகளும் அடங்கும். இவர்கள் யோகாசனம் போன்ற பயிற்சிகளைச் செய்து, ஆத்ம சக்தியினையும் வளர்த்துக் கொண்டவர்களாகவும் விளங்கினார்கள்.