பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

எழுப்பி, உண்ண அழைத்தாள் என்றால், அவளது அன்பையும் வறுமையையும் என்ன என்பது! அவள் சிலகால் அரிதாகப் பெற்ற வெல்லப் பாகைத் தட்டில் ஊற்றும் பொழுது, புக்கர் கண்ணை மூடிக்கொண்டிருந்து பிறகு திறந்து பார்த்து, அதைத் தட்டு முழுவதும் பரப்பி, அதிகமாக்கிக்கொண்டதாக நினைத்துத் துளி துளியாக நக்கினாரென்றால், அவரது வறுமை நிலையைப் பெரிதும் எடுத்துரைக்க வேண்டா அன்றோ ?

புக்கர் 1858லோ 1859லோ பிறந்தவர், நீகிரோ சாதியார் அடிமையினின்று நீங்கியது 1863ல் என்பது முன்னரே கூறப்பட்டது. எனினும், தமது நான்கு அல்லது ஐந்து வயதுக்குள்ளாக, புக்கர் எத்தனையோ அடிமை வேலைகள் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. பெரிய ஆள் அல்லரேனும், அவர் கொல்லை கொத்துவதிலும் வயலில் வேலை செய்பவருக்குத் தண்ணீர் தூக்கிக் கொண்டு சேர்ப்பதிலும், கூலங்களை அரைக்கும் பொறி நிலையத்திற்குப் போய் வருவதிலும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார். பொறி நிலையத்திற்குப் போய் வருதல் எளிதன்று. தோட்டத்திலிருந்து மூன்று கல் தொலையில் மில் இருந்தது. மூட்டையை ஒரு குதிரை மீது தூக்கிப் போட்டுக்கொண்டு போனால், வழியில் அம்மூட்டை நழுவி விழாத நாள் ஒரு நாளும் இல்லை. சிறுவராகிய அவருக்கு அதைத் தூக்கி மேலே மீண்டும்