பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 ♦ அறிஞர் அண்ணா



என் பாடல்
குப்பை கூளம் பற்றி
குப்பன் சுப்பன் குறித்து

என்று அறிவிக்கிறார். இவர்களைப் பற்றிய கவிதையிவே கவர்ச்சி இருக்காதே, மெருகு இருக்காதே என்று கேட்பவர் உளர் என்பது தெரியுமல்லவா இந்தப் புதுமைக் கவிஞனுக்கு?

- அண்ணா

30. அறிவை வழங்கியது
அண்ணாவின் எழுதுகோல்!

முதலாளி

முதலாளி எப்படி உற்பத்தியாகிறான்? எதனால் ஒருவன் முதலாளியாகிறான்?' -- இதற்குச் சுருக்கமான பதில், 'தனிப்பட்ட மனிதன் இலாபத்தால் முதலாளியாகிறான்' என்பது தான்! இன்னும் கொஞ்சம் விளக்கமாக. -- மார்க்ஸ் கூறுகிறபடி பார்த்தால் --தொழிலாளிகளின் உழைப்பை முதலாளி திருடிக்கொள்கிறான்; ஆகவே அவன் முதலாளியாகிறான்!

வாழ்க்கைத் தேவைகள் அனைத்தையும் அனைவராலும் பூர்த்தி செய்துகொள்ள முடிவதில்லை; இல்லாமை அல்ல இதற்குக் காரணம்; செல்வத்தைப் பெருக்கிடும் சாதனம் சிலரிடமே சிக்கிவிட்டதால் ஏற்பட்ட சீரழிவுதான்

பாட்டாளி

பொதுநலம் பாட்டாளி -- ஆட்சியிலேதான் மலர முடியும்! அந்த ஆட்சியின் வெற்றியினால் மட்டுமே உழைப்பு ஊரழிக்கும் காரியமாகாது தடுக்கவும், விஞ்ஞானம் விபரீதத்தைப் பொழியாது நன்மை பயக்கக் கூடியதாக அமையவும் வழி பிறக்கும்!