பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 103



என்றும் நீர் சுரந்து கொண்டே இருக்கும்; இத்தகைய வேறுபாடு இருக்கிறது, பணக்காரனுக்கும்--முதலாளிக்கும்

பிரச்சினைக்கு வழி!

இன்றையதினம் நடைபெறுகின்ற இந்தக் கூட்டம், மத்திய சர்க்காரில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு, மக்களின் ஆதரவு இருக்கிறது என்பதைக் காட்ட நடத்தப்படுவதாகும்.

உங்கள் அனைவருக்கும் தெரியும்--மிக நல்ல முறையில் நடந்துகொண்டாலும்கூட, சர்க்கார் நம்முடைய பிரச்சினைகளைக் கவனியாது--என்பது!

"மத்திய சர்க்கார் ஊழியர்களின் கூட்டத்தில் இந்த அண்ணாதுரைக்கு என்ன வேலை?" என்று அரசியல் தெரியாத அப்பாவிகள்--பின்னாலே ஒரு நாளைக்குப் பேசக்கூடும்.

இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்வதால், 'மத்திய சர்க்காரின் அமைப்பை ஆதரிக்கிறேன்' என்று பொருள் அல்ல--மனித இனத்தின் கோரிக்கையை ஆதரிக்கிறேன் என்று பொருள்!'

10 ஆண்டுகளுக்கு முன்னால் உங்களை யாராவது 'தொழிலாளி' என்று சொன்னால், உங்கள் முகம் சுளித்துவிடும்; 'நாங்கள் ஊழியர்கள் அல்லர்; உத்தியோகஸ்தர்கள்--அதிகாரிகள்' என்று சொல்வீர்கள்; ஆனால், இன்று, "நாங்களும் ஊழியர்கள்தான்' என்று நீங்கள் கூறுவதைப் பார்த்து நான் பூரிப்படைகிறேன்.

இந்த நல்ல உணர்ச்சி நாட்டுக்கு நல்ல எதிர் காலத்தைக் கொண்டுவரும் என்று திடமாக நம்புகிறேன்.

"தொழில் நடத்துகின்றவர்கள், தங்களுடைய தொழில் செம்மையாக நடைபெறுவதற்குத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் சீர்பெற வேண்டும் என்பது மனித இனம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற மாபெரும் நீதியாகும்; அதனை மறுக்கின்றவர்கள் எவ்வளவு உயரத்தில்